முதலமைச்சர் ஜெயலலிதா மே தின வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைக்கும் கரங்களின்
ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர்
தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது
உளம் கனிந்த மே தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின்
உரிமைக்காகவும் நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை
உடைத்தெரிந்து தங்கள் உரிமைகளை மீட்டு எடுத்த திருநாள் மே தின திரு
நாளாகும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன்
தொழிலாளி
உருக்குபோன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி
என்று எம்.ஜி.ஆர் தொழிலாளர்களின் சிறப்புகளை தனது உணர்ச்சிமிகு பாடலின்
மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தமிகழம் அனைத்து துறைகளிலும்
முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற எனது லட்சியப் பயணத்திற்கு
தொழிலாளர்கள் தங்களது ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். உதிரத்தை
வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என இதயம்
நிறைந்த மே தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி
கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக