ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

எம்.பி. பதவி என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

Sachin Tendulkar
 
டெல்லி: சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...
ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.
எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.
வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.
ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

கருத்துகள் இல்லை: