கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் இருந்து வெளிநாட்டு நாணயங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இவரிடமிருந்து யூரோ, யென், அவுஸ்திரேலிய டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் இலங்கைப் பெறுமதி 71 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நாணயங்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் நிறுவனமொன்றின் சுத்திகரிப்புப் பிரிவில் கடமையாற்றும் குறித்த சுத்திகரிப்பாளரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரி குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக