வியாழன், 16 ஜூன், 2011

அனைத்து விமானங்களும் வந்திறங்கும் வகையில் பலாலி விமான ஓடுபாதை

 இந்திய உதவி: இந்தியத் துணைத் தூதர்

இலங்கை-இந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் வடபகுதியில் இந்திய அரசாங்கம் பாரிய அபிவித்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை அமைப்பு, பலாலி விமான தள அபிவிருத்திப் பணிகள் முக்கியமானவையென இந்தியத் துணைத் தூதரக உதவி ஸ்தானிகர் ரி.வி.மகாலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் புதிய விமானச் சீட்டு விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காங்கேசன்துறைமுகக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தும் பணி பூர்த்தியானதும் துறைமுக அபிவிருத்திப் பணி இடம்பெறும்.
பலாலி விமான நிலையத்தில் சகல சரக்கு விமானங்களும் வந்திறங்கிச் செல்ல வசதியாக 1500 மீற்றர் நீளமான விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. தாண்டிக்குளம் முதல் யாழ்ப்பாணம் வரை ஒரு கட்டமாகவும் யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரை இரண்டாம் கட்டமாகவும் ரயில் பாதை நிர்மாணம் ஆரம்பமாகவுள்ளது. ரயில் பாதை முழுவதும் கண்ணிவெடி அகற்றப்பட்ட பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் செல்வம் கொளிக்கும் துறை சுற்றுலாத்துறை. அந்த வகையில் வடபகுதியில் விரைவில் சுற்றுலா மையமாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: