புதன், 15 ஜூன், 2011

Saudi. பார்வையிழந்த நிலையில நாடு திரும்பினார்!வாகரையைச் சேர்ந்த பெண்

மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற வாகரையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு எஜமானால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கண்களின் பார்வையிழந்து உடலின் பல்வேறு உறுப்புக்கள் செயல்ழிந்து பாதிக்கப்பட்ட நிலையில நாடு திரும்பியுள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை இவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாகரை மத்தி கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 31 வயதான மனோகரன் பவானி என்பவரே இவ்வாறு அங்கவீனராக வீடு திரும்பியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தயாரான இவர் குடும்ப வறுமை காரனமாக 2003.06.01ஆம் திகதி சவூதி அரேபியவின் தமாம் பிரதேசத்தின் பரிதா எனுமிடத்தில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சென்றார்.
சுமார் 2 வருடங்கள் கடந்தும் சம்பள பணம் தர மறுத்த எஜமானிடம் கேட்ட போதே இந்த விபரீதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். தனக்கு கண்களில் இரசாயன பதாhத்தமொன்றை ஊற்றி செயல் இழக்கச் செய்ததுடன் தன்னை கயிற்றினால் கட்டி தொங்கவிடப்பட்டு தீ வைத்ததாகவும் இதனால் தலைமுடி மற்றும் காதுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன் இரும்பு கம்பியினால் தலை மற்றும் ஏனைய இடங்களில் தாக்கியதுடன் இரும்பு கோலால் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட நிலமையை வெளியில் தெரிவிக்கவோ, கடிதம் மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மனோகரன் பவானி தெரிவித்தார்.
அங்குள்ள பொலிஸாரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமையை தெரிவித்தும் பலனின்றி மீண்டும் எஜமானிடம் கையளித்ததினால் சித்திரவதை மேலும் அதிகரித்ததாகவும் தெரிவித்தார். தனக்கு ஏற்ப்பட்ட அவல நிலைமைக்கு காரணமான குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சவூதி அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள் கிழக்கு மாகண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.

கருத்துகள் இல்லை: