திங்கள், 13 ஜூன், 2011

படித்த மேல்தட்டு குடும்பத்தின் குரூர கொலை வெறி

 எனது ஆசை மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டார் பார்த்தசாரதி. இதனால்தான் கோபத்தில் அவரது கணவரான சாப்ட்வேர் என்ஜீனியர் பார்த்தசாரதியைக் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் கணவரை கொடூரமாகப் பறி கொடுத்து விட்டுத் தவிக்கும் இளம் பெண் சரண்யாவின் தந்தை நரசிம்மன்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. சாப்ட்வேர் என்ஜீனியர். இவரும், பெரம்பூரைச் சேர்ந்த நரசிம்மனின் மகளான எம்.பி.பி.எஸ் படித்து வரும் சரண்யாவும் காதலித்தனர். பார்த்தசாரதி ஏழை என்பதால் இந்தக் காதலுக்கு நரசிம்மன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தந்தையின் எதிர்ப்பைப் புறக்கணித்து விட்டு பார்த்தசாரதியை மணந்தார் சரண்யா. இதனால் நரசிம்மனின் கோபம் அதிகரித்தது.

இந்த நிலையில், பார்த்தசாரதி கடத்திச் செல்லப்பட்டு படு கொலை செய்யப்பட்டார். அவரது எரிந்து போன உடலை திண்டிவனத்திற்கு அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸார் கைப்பற்றினர். ஆனால் தனது கணவர் காணாமல் போனது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சரண்யா கொடுத்த புகாரை போலீஸார் சரிவர விசாரிக்காமல் குற்றவாளியைக் கோட்டை விட்டனர். ஆனால் விழுப்புரம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி சரண்யாவின் தந்தை நரசிம்மன், அவரது தோழி சலுஜா உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் தான் பெற்ற மகளின் கணவரைக் கொலை செய்யத் துணிந்தது ஏன் என்பது குறித்து நரசிம்மன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,

நான் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் என்ஜினீயராகவும் எனது மனைவி ஆசிரியையாகவும் வேலை செய்கிறோம். பெரம்பூரில் வசித்து வரும் எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எனக்கு கோடிக் கணக்கில் சொத்துக்கள் உள்ளன. எனவே எனது 2 பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தேன். அதிலும் மகளின் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு படிக்க வைத்தேன். அவள் எம்.பி.பி.எஸ். படிக்க காஞ்சீபுரம் தனியார் மருத்துவ கல்லூரியில் பல லட்சம் கொடுத்து சீட்டு வாங்கினேன். அது போக ஆண்டு தோறும் ரூ.4 லட்சத்தை எனது ஆசை மகளுக்காக வாரி இறைத்தேன்.

இறுதியாண்டு. படித்த மகள் சரண்யாவின் வாழ்க்கையில் காதல் குறுக்கிட்டது. அவர் வேறு சாதியை சேர்ந்த ஏழ்மையான பையனை காதலிப்பது எனக்கு தெரியவந்தது. ஏழ்மையான பையன்தானே என நினைத்து அவனுக்கு பல முறை மிரட்டல் விடுத்தேன். எனது மகளையும் கண்டித்து கேட்காததால் அவளது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். அதற்காக அமெரிக்காவில் டாக்டர் ஒருவரை தேர்வு செய்து, நிச்சயதார்த்தமும் நடத்தி முடித்துவிட்டேன். இதனை தொடர்ந்து சரண்யா கல்லூரிக்கு செல்ல அனுமதி அளித்தேன். ஆனால் அவளோ என்ஜினீயர் பார்த்தசாரதியை திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன்.

இது குறித்து சென்னையில் திருமண தகவல் மையம் நடத்தி வந்த கொளத்தூரை சேர்ந்த சலூஜாவிடம் தெரிவித்தேன். மேலும் பார்த்தசாரதியை கொலை செய்தால், என்னை பிரிந்து சென்ற ஆசை மகள் மீண்டும் என்னுடன் சேர்ந்து விடுவாள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவரும் பார்த்தசாரதியை கொலை செய்ய திட்டம் தீட்டி, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பேரை (ஜானகிராமன், ஹேமந்த்ராம், திலீப்) ஏற்பாடு செய்தார். அவர்களுடன் நான் ஒரு நாள் காரில் சென்று, பார்த்தசாரதியை அடையாளம் காட்டினேன். மேலும் பார்த்தசாரதியை கொலை செய்ய கார் மற்றும் இதர செலவுக்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தேன்.

அதற்கு பிறகு அவர்கள் 3 பேரும் 20 நாட்களாக பார்த்தசாரதியை பின் தொடர்ந்து சென்று, அவரை நோட்டமிட்டனர். கடந்த 2-ந் தேதி வேலைக்கு சென்ற பார்த்தசாரதியை காரில் கடத்திச் சென்று சரண்யாவை மறந்து விடும்படி மிரட்டினர். அதற்கு பார்த்தசாரதி பணியாமல் போகவே அவரை கழுத்தை நெறித்து கொன்று, மண்எண்ணெய் ஊற்றி உடலை எரித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
 
Saranya's, whose husband Parthasaray was killed by a gang, father Narasimhan has confessed that he ordered the gang to kill his daughter's husband Parthasaray. He took this extreme step against Parthasarathy for marrying his daughter. Narasimhan and 4 others were arrested in the murder case and lodged in Jail.

கருத்துகள் இல்லை: