ஞாயிறு, 21 அக்டோபர், 2018

திண்டுக்கல் லியோனி மீது ஒபிஎஸ் - இபிஎஸ் அவதூறு வழக்கு

THE HINDU TAMIL< முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து மேடையில் அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் ஐ.லியோனி ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தார். தமுஎச மேடைகளிலும் பேசிவந்தார். தனியாக பட்டிமன்றமும் நடத்தி வந்தார். பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர திமுக பேச்சாளர் ஆனார். திமுக மேடைகளில் நகைச்சுவையாக ஆளுங்கட்சியை, அமைச்சர்களை விமர்சிப்பது இவரது வழக்கம்.
கடந்த ஜூலை மாதம் தி.நகர், சதாசிவம் சாலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் லியோனி, தமிழக ஆரசியலை கடுமையாக விமர்சித்து பேசினார். முதல்வர், துணை முதல்வரை விமர்சித்து பேசினார்.

தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் அமைச்சர்களையும் அவதூறாக விமர்சித்து பேசியதாக பணியிலிருந்த பாண்டிபசார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபசார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: