திங்கள், 6 நவம்பர், 2017

பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மழை வெள்ளம் குறிந்து ஆலோசனை

தினத்தந்தி : தமிழக மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். சென்னை< இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.< இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 9-10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய பிரதமரை தமிழிசை, எச்.ராஜா,இல. கணேசன். எம்.பி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பூங்கொத்து வரவேற்றார்கள்.


பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார், ஐஎன்எஸ் தளத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
 
அங்கு தமிழக மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை. ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும்  கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை குறித்து அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலவரும், துணை முதல்வரும் பிரதமரிடம் விளக்கினர். தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் விளக்கினர்

கருத்துகள் இல்லை: