திங்கள், 6 நவம்பர், 2017

திரைப்பட சென்சாருக்கு 68 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் ... தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி ..

 Censor boards new regulationstamiloneindia.com :சென்னை: திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்று வழங்க இனி சென்சார் குழு 68 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகினரை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இத்தனை காலமும் சென்சார் என்ற தணிக்கைக் குழுவின் சான்று என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. சென்சார் என்பது ஒரு சம்பிரதாயச் சடங்காக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாகத்தான் சென்சார் குழுவை பூதாகரமாக்கி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் 68 நாட்களுக்கு முன்பே சான்றிதழுக்கு படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தணிக்கைக் குழு.
படத்தை பரிசீலிக்க ஒரு வாரம், ஆய்வுக்குழு அமைக்க 15 நாட்கள், ஆய்வுக் குழு அறிக்கை அனுப்ப 10 நாட்கள், விண்ணப்பதாரருக்கு தகவல் அனுப்ப 3 நாட்கள், நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்படைக்க 14 நாட்கள், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்ய 14 நாட்கள், சான்றிதழ் வழங்க 5 நாட்கள் என 68 நாட்களை எடுத்துக் கொள்ளுமாம் தணிக்கைக் குழு.

அப்படி எனில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு, தணிக்கைச் சான்று பெற இரண்டு மாதங்களுக்கு மேல் ஒரு தயாரிப்பாளர் காத்திருக்க வேண்டும். இது திரையுலகில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களில் ஒரு படத்தையே எடுத்து முடித்து போஸ்ட் புரொடக்ஷன் செய்துவிட முடியும். அப்படி எடுக்கப்பட்ட படத்துக்கு தணிக்கைச் சான்று பெற இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? இந்த இரு மாத காலத்துக்கான வட்டியை யார் கட்டுவார்கள்? எதற்காக இத்தனை கெடுபிடி? என்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: