ஞாயிறு, 18 ஜூன், 2017

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா அழைப்பிதழில் ரஜினி பெயர் இல்லை!

Kamalhassan is participating K. Balachander statue open function சென்னை: இயக்குநர் பாலசந்தருக்கு வரும் ஜூலை 9-ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் உட்பட திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ரஜினிகாந்த் - கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார். கமல் ஹாஸன் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும், அவரை பண்பட்ட நடிகனாக உருவாக்கிய பெருமை கேபிக்குதான். இந்நிலையில் பாலச்சந்தருக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவரின் பிறந்த நாளான ஜூலை 9-ம் தேதி வெண்கலச் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் பிறந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலச்சந்தருக்கு புகழுரை வழங்கி பேசுகின்றனர்.
இதனிடையே விழாவுக்கான அழைப்பிதழ்களில் நடிகர் ரஜினியின் பெயர் கூட இடம்பெறவில்லை. 'சூப்பர் ஸ்டார்' என்று இன்றைக்கு உலகமே கொண்டாடும் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் தான்.
இந்நிலையில் அழைப்பிதழில் கூட அவரின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விழாவில் ரஜினி பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. கே.பாலச்சந்தருக்காக நடைபெறும் விழாவில் ரஜினியின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது  tamiloneindia

கருத்துகள் இல்லை: