பேட்டி கொடுக்கும்போதே அவரை வருமானவரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் மகேஷ் ஷாவின் தகவல் தவறானது என தெரிய வந்ததால் அந்தப் பணம் தொடர்பான தகவல்களை ஏற்க வருமான வரித்துறையினர் மறுத்துவிட்டனர். மேலும் தவறான தகவல் அளித்ததன் பின்புலம் என்ன என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் வருமான வரித்துறையை நாடி, ரூபாய் 2 லட்சம் கோடி கருப்புப் பணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கேட்டபோது எதுவும் இல்லை என்று முழித்த அவர்கள் ஒரே ஒரு ஆவணத்தை மட்டும் காண்பிடித்துள்ளனர். அதனை ஆய்வு செய்தபோது ரூபாய் 2 லட்சம் கோடி கருப்புப் பணம் இருப்பதாக கூறியது பொய் என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். தவறான தகவல் அளித்ததன் ஏன் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக