ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

திமுக வேட்பாளர்கள் தெரிவில் தொண்டர்கள்....அதிருப்தி..எதிர்ப்பு..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைமை புதன்கிழமை அறிவித்தது. இதில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சியின் பொன். குமார் போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 7 தொகுதிகளில், திட்டக்குடி (தனி) தொகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலர் சி.வெ.கணேசன் போட்டியிடுகிறார். கடலூரில் மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி, குறிஞ்சிப்பாடியில் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விருத்தாசலத்தில் தங்க.ஆனந்தன், நெய்வேலியில் சபா.ராஜேந்திரன், புவனகிரி துரை.கி. சரவணன், சிதம்பரம் கே.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதில், குறிஞ்சிப்பாடி வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சகோதரி மகனான கே.ஆர். செந்தில்குமார் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஆவார். கே.ஆர்.செந்தில்குமாரின் சின்ன மாமனாரான தங்க.ஆனந்தன் விருத்தாசலம் வேட்பாளராவர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து விருத்தாசலத்தில் திமுக வேட்பாளரை மாற்ற கோரி திமுக தொண்டர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்., என்பது குறிப்பிடதக்கது. - அ.காளிதாஸ் நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: