ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்கிறதாம்: மத்திய கண்காணிப்பு கமிஷன் சான்று

புதுடில்லி: ""நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை, சி.பி.ஐ., அமைப்பு, எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக விசாரித்து வருகிறது,'' என, மத்திய கண்காணிப்பு கமிஷன் கூறியுள்ளது.

இது குறித்து மத்திய கண்காணிப்பு கமிஷனர், ஜே.எம்.கார்க். டில்லியில், நிருபர்களிடம், கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரை சி.பி.ஐ., சுதந்திரமாக, வெளிப்படையான வகையில், விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., போன்ற அமைப்புக்கு எதிராக, குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதன் விசாரணையில் எந்தவித குறுக்கீடும், அச்சுறுத்தலும் இல்லை. சி.பி.ஐ., விசாரணைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். சி.பி.ஐ.,க்கு எதிராக வரும் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை. அரசியல் கட்சிகளால் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க இயலாது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த 4ம் தேதி, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ., சிறிது கால அவகாசம் கேட்டுள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் கூட்டத்தின்போது, நிலக்கரி விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., அறி

கருத்துகள் இல்லை: