ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்

கிருஷ்ணகிரி அருகே 600 அடி ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்து உள்ள தேன்கனிகோட்டை அருகே உள்ளது ஜவலகிரி கிராமம். அப்பகுதி விவசாயி ஒருவர் 600 அடி ஆழத்தில் போர்வெல் போட்டுள்ளார். அந்த பணி முடிந்ததும் அந்த ஆழ்துளை கிணற்றை அவர் சரியாக மூடாமல் சாக்கைப் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த குணா என்ற 3 வயது சிறுவன் இன்று காலை அந்த ஆள்துளை கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது சாக்கைப் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் 

கருத்துகள் இல்லை: