செவ்வாய், 27 செப்டம்பர், 2011

S.P.பாலசுப்பிரமணியன் வீட்டுமுன் போலீஸ் குவிப்பு சோனா ஆர்ப்பாட்ட அறிவிப்பு



SP Balasubramaniyan
சென்னை:நடிகை சோனா மற்றும் அவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதால், அதிகபட்ச போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோனா வற்புறுத்தி வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயங்கி வருகிறார்.
ஆனால் தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம் சமரச பேச்சு நடத்தி வருகிறார்.
இவருக்காக அவரது அப்பா எஸ்பி பாலசுப்ரமணியமே சோனாவிடம் தூது போனதும் நடந்தது.

சரண் மன்னிப்பு கேட்காததால், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் சோனா ஒப்படைத்துள்ளார்.

இதற்கிடையில் சோனாவுக்கு ஆதரவாக பெண்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதிக்கின்றனர். எஸ்.பி.பி. சரண் வீட்டில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மகளிர் அமைப்புகள் அறிவித்தன.

எஸ்.பி.பி. சரண் வீடு மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கு பெண்கள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சரண் வீட்டின் முன்னால் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.

பெண்கள் அமைப்பினர் முற்றுகை போராட்டத்துக்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. அனுமதிக்கு இப்போதுதான் மனு கொடுத்துள்ளதாகவும், போராட்டத்தை இரண்டொரு நாட்களுக்கு தள்ளி வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளர். இந்தப் போராட்டம் பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு ஒரு சரியான பாடமாக இருக்கும் வகையில் நடத்தப்படும் என்று பெண்கள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: