தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக களமிறங்கும் நிலையிருந்தது. விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிக தனித்து நிற்க போவதாக கூறி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இந்நிலையில் தேமுதிகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அப்படி அமைக்கப்பட்ட கூட்டணியில் தேமுதிக அக்கட்சிக்கு வேலூர் மாநகராட்சியை ஒதுக்கி தந்துள்ளது. இது தேமுதிக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வேலூர் மாநகராட்சி வேட்பாளராக தேமுதிக சார்பில் காட்பாடி ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சுரேஷ்பாபுவின் மனைவி சத்தியவாணிக்கு சீட் ஒதுக்கப்பட்டு அவர்களும் விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்று தேர்தல் வேலையை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திடீரென வேட்பாளரை மாற்றியது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேலூர் நகரில் பலமேயில்லை. அப்படியிருக்க அந்த கட்சிக்கு வேலூர் மாநகரத்தை ஒதுக்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கின்றனர். அதோடு நாம், வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலையை தொடங்கிய நிலையில் வேட்பாளரை மாற்றுவது என்பது வேதனையாகவுள்ளது என குமுறுகின்றனர்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததால் அவரைப்போலவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றும் பழக்கம் எங்கள் தலைவருக்கும் வந்துவிட்டது போல என விஜயகாந்த் கட்சி தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். ஜெயலலிதா போல கட்சி நடத்த ஆரம்பிச்சா இங்க யாரும் இருக்க மாட்டான் இதை யார் போய் தலைவர்க்கிட்ட சொல்றது என புலம்ப தொடங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக