ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சி சார்பில் மெத்வதேவ் அதிபர் பதவியேற்றார். பிரதமராக புடின் நியமிக்கப்பட்டார். புடினுக்கு ரஷ்யர்கள் இடையே தொடரும் அமோக ஆதரவையடுத்து அவரை மீண்டும் அதிபராக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் மெத்வதேவ் அரசு திருத்தம் கொண்டு வந்தது.
அதிபரின் அதிகபட்ச பதவிக் காலம் 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் புடின் பெயரை கட்சி பொதுக்குழு பரிந்துரைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதை நேற்று ஆமோதித்த அதிபர் மெத்வதேவ், ‘‘புடின் பெயரை கட்சி பரிந்துரைத்தால் அதை மனதார ஒப்புக் கொள்வேன்’’ என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக