விழுப்புரம்: கேள்விக்கு பதில் தெரியாமல் நின்ற மாணவரை ஆசிரியர் அடித்துள்ளார். இதில் மயக்கமான மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதையடுத்து சகமாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர் பேட்டையை அடுத்த பூ. மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(17). விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் படிப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார்.
வகுப்புக்கு வந்த ஆசிரியர் பிரபாகரனிடம் பாடம் குறி்த்து கேள்வி கேட்டுள்ளார். பதில் தெரியாமல் விழித்த அவரை ஆசிரியர் அடித்துள்ளார். இதில் பிரபாகரன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் பிரபாகரனை அடித்த ஆசிரியரைக் கண்டித்து திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக