ஞாயிறு, 31 ஜூலை, 2011

வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் சுகவீனம் சிகிச்சை நடைபெறுகிறது



கோவை சிறையில் கொசுக்கடியால் வீரபாண்டி ஆறுமுகம் தூக்கம் இன்றி தவித்தார். நிலம் மற்றும் மில் அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு தொகுதி 2-வது பிளாக்கில் 2 பேரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.

வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் நேற்று இரவு 8.30 மணி அளவில் அரசு டாக்டர் நிர்மல்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். 
பரிசோதனைக்கு பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இரவு உணவாக சப்பாத்தி வழங்க அறிவுறுத்தினார்.

அதன்படி அவருக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது. சாப்பிட்டு விட்டு வீரபாண்டி ஆறுமுகம் தூங்க சென்றார். குளிர் அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட அவர் கடுமையான கொசு கடியாலும் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டார். இதை போல ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. வும் கொசுக்கடியால் தூக்கம் இன்றி தவித்தார்.

கருத்துகள் இல்லை: