செவ்வாய், 26 அக்டோபர், 2010

Arundhati Roy சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்



Top newsபிரபல எழுத்தாளர் சமூக நலவிரும்பி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது சமீபத்திய பேச்சு தேசவிரோத குற்றமாக எழுந்துள்ளது. இந்த பேச்சின் அடிப்படையில் இவரையும் மற்றும் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியார் மீது தேசத்திற்கு எதிராக கலகமூட்டும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்பப்படும் என தெரிகிறது.
இந்த வழக்கின்படி ( பிரிவு 124- ஏ செக்க்ஷனில்) கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் குறைந்தது 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அநுபவிக்க வேண்டியது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் அருந்ததிராய் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். இவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.  
டில்லி போலீசாருக்கு  இவரது பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் உள்ள விரோத சர்ச்சை குறித்து டில்லி போலீசார் மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய கிலானி மீதும் இந்தச்சட்டம் பாயவுள்ளது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். இவரது பேச்சு குறித்து தீவிரமாக பிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஒமர் கூறியுள்ளார்.

இது குறித்து கிலானி கூறுகையில் ஏற்கனவே என்மீது 90 வழக்குகள் உள்ளன. இத்துடன் 91 வது வழக்காக மாறும் என்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் மத்திய அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.
அருந்ததிராய் நான் மாவோயிஸ்ட் பக்கம் என்ற பேச்சும் கண்டனத்திற்குட்பட்ட நிலையில் இவரது காஷ்மீர் பேச்சு நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ராய் வரலாற்று அடிப்படையில் பேசியிருக்கிறார் என ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்தாலும் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இவரது தேசவிரோத பேச்சை அனுமதிக்க முடியாது என செய்திதொடர்பாளர் நிர்மல் சீத்தாராமன் கூறியுள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில்; பேச்சு என்பது அடிப்படை உரிமை என்பதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மக்களை தூண்டி நாட்டை துண்டாடும் பேச்சு அனுமதிக்க முடியாது என்றார். அரசில் ரீதியாக போலீசார் மேலிட உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். 

சட்ட அமைச்சர் மொய்லி கருத்து : அருந்ததிராய் பேச்சு துரதிருஷ்டமானது. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத கருத்துக்களை கூறக்கூடாது , மக்கள் மனதை புண்படுத்தக்கூடாது. இது வரவேற்கத்தக்கதல்ல., துரதிருஷ்டமானதும் கூட. இது தொடர்பான முழு விவரங்களையும் படித்து பின்னர் தான் சட்ட ரீதியான விஷயம் குறித்து என்னால் சொல்ல முடியும் என்றார்.

அருந்ததி ராய் என்ன சொல்கிறார்: நான் கைது செய்யப்படுவேனா என பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நான் காஷ்மீரை பற்றி காஷ்மீர் மக்கள் தினமும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் சொன்னேன். லட்சக்கணக்கான மக்கள் சொல்வதைத்தான் சொன்னேன். என கூறியிருக்கிறார். மேலும் காஷ்மீரில் ராணுவத்தினர் அட்டூழியம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இபு பாரிஸ் - SARCELLES,பிரான்ஸ்
2010-10-26 15:15:13 IST
வெள்ளைக்காரன் காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மீது இருந்த அடக்குமுறை இது. அருந்ததி சொன்னது பொய் என்றால் காஷ்மீரில் ஏன் கலவரம் நடக்குது??...
குப்பன் - கோவை,இந்தியா
2010-10-26 15:09:26 IST
இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய சோத்தை தின்று இப்படி தேச துரோக வார்த்தைகளை அள்ளி வீசும் பண்ணிகளை சுட்டு தள்ள வேண்டும். பாரதம் என்றால் என்ன கிள்ளு கீரையா? கண்ட கண்ட நா.. களுக்கெல்லாம் பிச்சு கொடுப்பதற்கு. இதுகளேல்லாம் நம் நாட்டு ஒற்றுமைக்கு வரும் ஆப்புகள், நாட்டுக்கு தேவையே இல்லை....
மாநகர நெல்லை லெனின் - கத்தார்,கத்தார்
2010-10-26 15:08:15 IST
பயிரை அழிக்குமுன் களை எடுக்க வேண்டும். நாட்டுக்கு ஆபத்தானவள். இவள் மட்டுமல்ல இவளை போன்றவர்களும்தான்....
கே.விஜயராகவன் - சென்னை,இந்தியா
2010-10-26 15:01:44 IST
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் உளறுவது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீர் மக்கள் கூறுவதை தான் கூறுவதாக கூறும் இவரை பற்றி மற்றவர்கள் கேவலமாக கூறி விட்டு, இதே போல் சமாதானம் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா? காங்கிரஸ் அரசுக்கு பதவியும், அது தரும் சுகமுமே முக்கியம். தேசம் எக்கேடு கேட்டாலும் கவலை இல்லை. அது வரை இப்படித்தான் இருக்கும். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி காலங்களில் பண உதவி செய்வதும், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதும் காங்கிரசின் பெருந்தன்மை. அதை பாராட்ட வேண்டுமே ஒழிய குறை கூற கூடாது. இலங்கையில் ஒரு இனத்தையே ஒழித்து கட்டிய போதும் வேடிக்கை பார்த்ததும், காஷ்மீரில் பண்டிட்டுகளை வாழ விடாமல் விரட்டி அடித்தபோது வாளா இருந்ததும், காங்கிரசின் கண்ணியம். கர்நாடகத்தில் குமாரதாசின் மூலம் மக்களால் தேர்ந்துஎடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பார்த்து, முடியாத பொது, வருமான வரித்துறையை ஏவி விட்டு மிரட்டுவதும் காங்கிரசின் ராஜ தந்திரம். அதை இரு கரம் தட்டி கவுரவிக்க வேண்டும். காங்கிரசின் இத்தகைய கேவலமான போக்கு நீடிக்கும் வரை, arundhadhirai pondravargal ippadiththaan pesuvaargal....
செந்தில் - ஓமன்,ஓமன்
2010-10-26 14:55:08 IST
booker அவார்டு வாங்குன எப்படி வேணும்னாலும் பேசலாமா....
லோடுக்கு பாண்டி - பெங்களூர்,இந்தியா
2010-10-26 14:46:36 IST
சரியோ தவறோ எந்த நாட்டு அரசாங்கமும் அவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் இரும்பு கரம் கொண்டு அடக்குவர். உதாரணத்துக்கு சீனா, இலங்கை, பர்மா, பிரான்ஸ் எப்படி அடுக்கி கொண்டே போகலாம். இந்தியாவில் தான் இவ்வளவு கருந்து சுதந்திரம். அதை தவறான வழியில் பயன்படுத்த கூடாது....
sankaran - Chennai,இந்தியா
2010-10-26 14:40:09 IST
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் விடுதலையான எஸ். எ. ஆர். கிலானி இவருக்கு நண்பர். இந்தியா போன நூற்றாண்டு இறுதியில் அணு ஆயுத பரிசோதனை செய்ததும் "நான் இந்தியாவிலிருந்து பிரிந்து விட்டேன்" என்று அறிவித்த தேச அபிமானி. இப்போது மற்றொரு பிரிவினைவாதியான கிலானி பங்கேற்ற கூட்டத்தில் " அம்மணமான, பிச்சைக்கார நாடாகிய இந்தியாவுடன் சேராதீர்கள்" என்று முழங்கிய நாட்டு பற்று மிக்கவர். இவரை 'சகல மரியாதைகளுடன்" உள்ளே தள்ளாமல் இருப்பது தான் இந்த நாட்டின் சாபக்கேடு....
உண்மை Indian - Kuwait,இந்தியா
2010-10-26 14:32:16 IST
இது போன்ற தேச துரோகிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், அது மற்றவர்களுக்க ஒரு பாடமாக வேண்டும், ராம் திருச்சி, போல் ஒன்றும் தெரியாமல் பேசும் நபர்களையும் தண்டிக்க வேண்டும், இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அளவிற்கு அதிகம் உரிமை கொடுக்கபடுகிறது, அதை அடுத்த நாடுகளை ஒப்பிட்டால் தெரியும். -- உண்மை இந்தியன் --...
சிவா பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-26 14:29:07 IST
எப்படி பேசினால் சிறை? இரும்பு அரசாங்கம் இருக்கும் வரை என்று கிடைக்கும் தீர்வு நிறை? காஷ்மீர் படகு என்று சேரும் கரை?...
மண்ணின் மைந்தன் - கோலாலம்பூர்,மலேஷியா
2010-10-26 14:25:07 IST
இந்த அம்மா அப்படி என்னத்தை பேசிச்சி, பேசுனதை பத்தி ஒன்றும் இந்த செய்தியில் இல்லை, கருத்து எழுதுவதற்கு ஒன்னும் இல்லை.......... கூல் கூல்...
jeyapandian - theni,இந்தியா
2010-10-26 14:16:58 IST
Useless talk.....
சுரேஷ் பாபு - umalhassam,பஹ்ரைன்
2010-10-26 14:15:44 IST
அருந்ததி ராய் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை....
வி.கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
2010-10-26 14:11:10 IST
ஒரு எழுத்தாளர் என்ற முறையில்.... தேச விரோத போக்கை தூண்டியது மிகவும் தண்டிக்க தக்கது....
பாரதி - சென்னை,இந்தியா
2010-10-26 14:10:38 IST
அவர் பேசியதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுதான் கமெண்ட் எழுதிக் கொண்டு இருகிறீர்களா?...
Ramkumar - Bangalore,இந்தியா
2010-10-26 14:08:02 IST
ஷி இஸ் ரைட்...
கவின் கார்த்திக் - கோலாலம்பூர்,மலேஷியா
2010-10-26 13:58:54 IST
தேச துரோகி.....இவளை நாடு கடத்த வேண்டும்...முதலில் நாட்டிற்கு உரிமை இருந்தால் தான்...மனித உரிமை இருக்கும்.........
அக்பர் - புலிவலம்,இந்தியா
2010-10-26 13:58:43 IST
பாகிஸ்தான் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளால் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு பரிந்து பேசினால் நடவடிக்கை எடுப்பதுதான் நல்லது.......
ச.காஜா - Bombay,இந்தியா
2010-10-26 13:57:45 IST
உண்மையை இந்தியாவில் பேச முடியாது. ஒட்டு மொத்த மக்களின் எண்ணத்தையே பேச வேண்டும், எப்படி என்றால் அயோத்தியின் தீர்ப்பு போன்று. வாழ்க இந்திய ஜனநாயகம்....
பார்த்திபன் - சென்னை,இந்தியா
2010-10-26 13:57:26 IST
அருந்ததி சொன்னது சரி தான். இலங்கையில் பேரழிவை ஏற்படுத்த துணை போன இந்தியாவுக்கு மனித உரிமை பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது. 'இந்தியன்' என்பது பணம் - பலம் - ஆட்சி அதிகாரம் படைத்தவர்களுக்கே உரித்தான சொல்லாகி விட்டது. ஒரு காலத்தில் நானும் காஷ்மீரில் இந்தியாவின் நிலையை ஆதரித்தவன் தான். ஆனால், இலங்கை நிகழ்வுக்குப் பின் இந்திய ஆட்சியாளர்களின் எண்ணம் காஷ்மீரின் வளங்களைக் குறி வைத்தே தான் இருக்கும் என்று தோன்று கிறது. அங்குள்ள சாதாரண பொதுஜன மக்கள் படும் கஷ்டம் மிகவும் வருந்தத் தக்கது....
வெங்கட்ராமன் - சென்னை,இந்தியா
2010-10-26 13:49:17 IST
இவர் ஒரு சமூக நல விரும்பி அல்ல. ஒரு தேச துரோகி....
தாளைதீன் - பண்டார்,புருனே
2010-10-26 13:41:22 IST
பேச்சுரிமை உள்ளது என்பதற்காக,நாம் நம் வீட்டில் உள்ளவர்களை மனம் போன போக்கில் விமர்சிப்பதில்லை. அதுபோல நம் நாடும் நம்முடைய வீட்டைப்போல கவனத்தில் எடுக்க வேண்டும்.......
கோபால் - சென்னை,இந்தியா
2010-10-26 13:27:52 IST
இது ஒரு தேசபற்று இல்லாத ஒருவரின் பேச்சு. இந்தியன் என்ற முறையில் ஒவ்வொரு பிரஜயும் வன்மையாக கண்டிக்க வேண்டிய செயல். இவருக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான், இதை போன்ற செயல்களில் மற்றவர் ஈடுபடுவதை குறைக்க முடியும் -...
l.kosalairajan - Coimbatore,இந்தியா
2010-10-26 13:25:57 IST
IVAL ORU DESA DROGHE...
அன்பன் - சென்னை,இந்தியா
2010-10-26 13:21:43 IST
நாட்டை துண்டாட நினைக்கும் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ....
ராம் - trichy,இந்தியா
2010-10-26 13:12:18 IST
இவர் பேசியது சரி, நமது நாட்டில் மனித உரிமை எனபது துளியும் கிடையாது....
successyouth - coimbatore,இந்தியா
2010-10-26 12:58:33 IST
உண்மைய சொன்ன தப்பா ? பி ஜே பி யின் உண்மை முகம் விரைவில் மக்களுக்கு தெரியவரும் .......
சுரேந்திரன் - Doha,கத்தார்
2010-10-26 12:56:17 IST

கருத்துகள் இல்லை: