பெங்களூரில் உள்ள இன் போசிஸ் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் மானேஜராக பணியாற்றி வருபவர் சதீஷ்.
இவரது மனைவி பிரியங்கா குப்தா (30). இவர் பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக்ஸ்கூல் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சதீஷ்- பிரியங்கா தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் பெங்களூர் பன்னர்ஹட்டா சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா லே-அவுட் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை சதீஷ் நடை பயிற்சிக்காக, நண்பர் கிருஷ்ணனுடன் வெளியில் சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்தபோது வீட்டுக்குள் பிரியங்கா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். போலீசார் பிரியங்கா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
நகைக்காகவோ, பணத்துக்காகவோ கொலை நடக்கவில்லை என்பதை போலீசார் முதல் கட்ட விசாரணையிலேயே கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்களுக்கு பிரியங்கா வின்கணவர் சதீஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி இடத்துக்கு அழைத்து சென்று பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.
அப்போது சதீஷ் போலீசாரிடம், நானும் என் நண்பன் கிருஷ்ணனும் நடைபயிற்சிக்கு ஆர்.பி.ஐ. லே-அவுட் மைதானத்துக்கு சென்றிருந்தோம். அந்த சமயத்தில் பிரியங்கா செல்போனில் என்னுடன் பேசினாள். தினசரி பத்திரிகைக்கு சந்தா பணம் வசூலிக்க 2 பேர் வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பணம் கொடுக்கட்டுமா? என்று கேட்டாள்.
அதற்கு பேப்பர் ஏஜெண்டுகள் யாரையும் வரச்சொல்லவில்லை. அவர்களை அனுப்பி விடு என்று சொன்னேன். அந்தமர்ம மனிதர்கள்தான் என் மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்றார்.
சதீசின் இந்ததகவல் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதையடுத்து சதீஷ் மற்றும் பிரியங்காவின் செல்போன்களை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். பிரியங்காவின் செல் போனில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு சதீஷ் செல்போனுக்கு அழைப்பு வந்திருந்தது.
40 வினாடிகள் உரையாடல் நடந்ததாக பதிவாகி இருந்தது. ஆனால் சதீஷ், பிரியங்கா இருவரது போனிலும் ஆர்.பி.ஐ. லே-அவுட் பகுதிடவர் சிக்னல் பதிவாகி இருந்தது. இதை அறிந்ததும் போலீசாருக்கு பொறிதட்டியது.
ஏனெனில் சதீஷ் வீடு இருக்கும் பகுதி ஆர்.பி.ஐ. லே-அவுட் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இரு இடங்களுக்கும் சிக்னல் பரிமாற்றத்துக்கு வெவ்வேறுடவர்கள் உள்ளன. ஆனால் சதீஷ், பிரியங்கா இருவரது செல்போனிலும் ஒரேடவரில் இருந்து செல்போன் அழைப்பு சென்றதாகவும், பெறப்பட்டதாகவும் பதிவாகி இருந்தது.
போலீசார் அப்போதே இந்த கொலையை சதீஷ் தான் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். சதீஷிடம் இதுபற்றி போலீசார் கேட்டபோது, எனக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மனைவி மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன் என்றார்.
செல்போன் உரையாடல் ஆதாரத்தை போலீசார் தூக்கிப்போட்டதும் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். பிறகு அவர் பிரியங்காவை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
கோரமங்கலாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி பிறகு விசாரணைக்கு காவலில் எடுத்தனர். போலீசாரிடம் சதீஷ் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதா வது:-
எனக்கும் பிரியங்காவுக்கும் சமீபகாலமாக அடிக்கடி தகராறு வந்தது. அவளை நான் நேசித்தாலும் அவள் போக்கு, பேச்சு எனக்கு பிடிக்கவில்லை. எனது தாம்பத்ய உறவை அவள் கேலியும், கிண்டலும் செய்து பேசினாள். இது அவள் மீது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
நான் அலுவலகத்தில் பிசியாக இருக்கும் போது செல்போனில் அழைத்து தொந்தரவு செய்வாள். வாரத்துக்கு ஒருதடவை கூட என் பெற்றோரை பார்த்து வர அனுமதிக்க மாட்டாள். நான் என் தாயை பார்க்க சென்றால் சண்டைக்கு வருவாள். இதனால் அவளை கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.
நானும், அவளும் அடிக்கடி வீட்டுக்குள் ஏதாவது சிறு, சிறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். அந்த விளையாட்டு பாணியில் அவளை தீர்த்துக்கட்ட திட்ட மிட்டேன். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு எழுந்து விளையாட அழைத்தேன்.
முதலில் அவள் கண்களை துணியால் கட்டி என்னை தொடும்படி கூறி விளையாடினேன். பிறகு இந்த விளையாட்டு போர் அடிக்கிறது. வித்தியாசமாக விளையாடலாம்.
கொள்ளையர்கள் நம் வீட்டுக்குள் வந்து உன்னை கை, கால்களை கட்டிப் போட்டு கொள்ளையடிப்பது போல விளையாடி பார்க்கலாமா? என்றேன். அவளும் சரி என்றாள்.
முதலில் பிரியங்கா கை களை பின்புறமாக கட்டினேன். பிறகு மற்றொருகயிறை எடுத்து வந்து, கொள்ளையர்கள் உன் கழுத்தை இப்படித்தான் நெரிப்பார்கள் என்று கூறி கயிற்றை அவள் கழுத்தில் சுற்றினேன்.
அந்த கயிற்றை இறுக்கினேன். உயிருக்காக அவள் துடித்தாள். அவள் மூச்சு நிற்கும் வரை கழுத்தை இறுக்கினேன். அவள் செத்து துவண்டு விழுந்த பிறகு கத்தியை எடுத்து வந்த கழுத்தை அறுத்தேன்.
அவள் ரத்த வெள்ளத்தில் மிதந்ததும் தடயங்களை அழித்து விட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டேன். கொலையை திசை திருப்பி விட திட்டமிட்டேன். இதற்காக என் நண்பன் கிருஷ்ணனுக்கு போன் செய்து நடைபயிற்சிக்கு அழைத்தேன். நாங்கள் இருவரும் ஆர்.பி.ஐ. லே- அவுட் மைதானத்துக்கு சென்றோம்.
எற்கனவே நான் மனதுக்குள் திட்டமிட்டிருந்தபடி பிரியங்கா செல்போனை எடுத்து வந்திருந்தேன். நடை பயிற்சிக்கு கிளப்பும் முன்பு பிரியங்கா போனில் இருந்து என் செல்போனுக்கு டயல் செய்தேன். சிறிது பேசுவது போல நடித்து விட்டு வைத்து விட்டேன்.
போலீசார் எங்கள் செல்போன்களை ஆய்வு செய்தால், இதை ஆதாரமாக காட்டி தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் செல்போன் டவர்கள் வேறு, வேறாக இருப்பதற்கு பதில் ஒரே டவராக இருப்பதை வைத்து துப்பு துலக்கி என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு சதீஷ் கூறினார்.
நாட்டில் கொலைகளும், கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துவிட்டன.இதை தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். |
இதற்கு காரணம் சட்டத்தில் கணவன் மனைவி சுலபமா பிரிய இடமில்லை / வழியில்லை ..இதனால் தன இத்தகைய கொலைகள் நடக்கிறது ....... |
வெரி குட் போலீஸ் டீம் ,நன்றி சார் |
வெரி குட் போலீஸ் |
படித்திருந்தும் மிருக குணம் எப்படி வந்தது? பிடிக்கவில்லை என்றால் ஒதிங்கி போய் இருக்கலாமே. ஒரு நாள் நான் பைக்கில் சென்றபோது ஒரு நாய் குட்டி திடிரென்று எதிபாராமல் வண்டியில் மோதி இறந்து விட்டது. நான் பட்ட வேதனை சொல்லி மாளாது. கட்டிய மனைவியை எப்படி ..........? மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழ்கிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக