கனடாவின் கடல் எல்லைக்குள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சுமார் 490 பேர் உள்ள கப்பலில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கனடிய அமைச்சர் தெரிவித்துள்ளார். |
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கனடிய பொது பாதுகாப்புதுறை அமைச்சர் விக் டோவ்ஸ், மனிதர்களை திருட்டுத்தனமாக கடத்தி நாட்டுக்குள் கொண்டு வருவது என்பது ஒரு ஈனச்செயல் என்றும், கனடாவின் பெருந்தன்மையை பொருளாதார அணுகூலத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவதை ஒரு போதும் திட்டவட்டமாக ஏற்கமுடியாது என்றும் கூறியுள்ளார். தஞ்சம் கோரும் இலங்கைத் தமிழ் அகதிகளை சுமந்து வருவதாகக் கருதப்படும் கப்பல் கனடிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கனடிய கடற்படைத் தளம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. எம்.வீ. சன் சீ என்ற இந்தக் கப்பல் கனடியக் கரையோரத்தை எட்டுவதற்கு முன்பதாக கடலில் வைத்தே கனடிய கடற்படையைச் சேர்ந்த ஹெச்.எம்.சி.எஸ். வின்னிபெக் என்றக் கப்பல் இதனை இடைமறித்திருந்தது. அந்தக் கப்பலில் 490 பேர் இருப்பதாக இந்தக் கப்பலுக்குள் நுழைந்து விசாரித்திருந்த அதிகாரிகள் கூறுகின்றனர். |
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
கப்பலில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கனடிய அமைச்சர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக