ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
ஹீரோவுக்கு சமமான மரியாதை எனக்கிருக்கிறது
அழகிய தீயே', ‘மொழி', ‘அபியும் நானும்' படங்களையடுத்து ‘இனிது இனிதுÕ படத்தை தயாரித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இது பற்றி பிரகாஷ் ராஜ் கூறியது: நான் தயாரிக்கும் படமாக இருந்தாலும் இதில் எனக்கு வேடம் இல்லை. முழுக்க இளைஞர்கள் நடிக்கிறார்கள். இதற்காக 2000 மாணவ&மாணவிகளை நேர்முக தேர்வுக்கு அழைத்து. அதில் 51 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஹேப்பி டேஸ்Õ படமே ‘இனிது இனிதுÕ. 4 வருட கல்லூரி வாழ்க்கையை சொல்கிறது கதை. கே.வி.குகன் இயக்கியுள்ளார். மீண்டும் ஹீரோவாக நடிப்பீர்களா என பலரும் கேட்கிறார்கள். நான் ஏன் ஹீரோவாக வேண்டும். பிரபல ஹீரோவுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதை எனக்கிருக்கிறது. ஹீரோவுக்கு சமமாகவே இருக்கிறேன். இதுவே போதும். ‘காஞ்சிவரம்Õ, ‘சிங்கம்Õ போன்ற படங்களில் நடித்ததுபோல் எல்லாவித வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறேன். இதுவே எனக்கு திருப்தியாக உள்ளது. இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக