வெள்ளி, 22 ஜூலை, 2022

கேரளாவில் பெண் ஆண் மாணவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் இருந்து சங்கித்தனத்திற்கு செருப்படி கொடுத்தார்கள்

Rishvin Ismath  :  கேரளா, திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்திருக்கும் பேரூந்துத் தரிப்பிடத்தில் ஆரம்பத்தில் நீண்ட இருக்கை (bench) பொருத்தப்பட்டு இருந்தது,
அதில் ஆண் மாணவர்களும், பெண் மாணவர்களும் அருகருகே அமர்வதுண்டு. அவ்வாறு மாணவர்கள் அமர்வது கலாச்சாரச் சீர்கேடு என்று சொல்லி உள்ளூர்க் காவிச் சங்கிகள் நீண்ட இருக்கையை மூன்று தனித்தனி இருக்கைகளாக மாற்றி அமைத்தார்கள். '
அருகருகே உட்கார்வதே கலாச்சாரச் சீரழிவு' என்று சொன்ன காவிச் சங்கிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து கன்னத்தில் செருப்படி கொடுத்தார்கள் மாணவர்கள்.
.இந்தச் செய்தி சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவியவுடன், செய்தியறிந்த திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் குறித்த பேரூந்துத் தரிப்பிடம் நவீன மயப்படுத்தப்பட்டு மீண்டும் நீண்ட இருக்கை (bench) அமைக்கப்படுவதுடன்,


இலவச WiFi வசதியும் செய்து தரப்படும் என்று தன் பங்கிற்கு சங்கிகளின் மற்றக் கன்னத்திற்கும் செருப்படி கொடுத்து அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
.
ஆர்யா ராஜேந்திரன் CPI(M) - இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர், அவருக்கு தற்பொழுது 23 வயதுதான் ஆகின்றது. 2020 ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்று 21 வயதில் மேயராகப் பதவியேற்றார், இந்தியாவில் பதவியேற்ற மிகவும் இளமையான மேயர் இவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்யா என்றதும் அதே பெயரில் இருக்கும் தமிழ் சினிமா நடிகரை நினைத்து மேயர் ஆர்யாவும் ஒரு ஆண் தான் என்று கருதி விடாதீர்கள், அவர் ஒரு பெண்.
..
இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், சங்கிகளின் செயற்பாட்டைக் கண்டித்துள்ளது. இந்திய (மார்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி இந்த விடயத்தில் இவ்வளவு முற்போக்காகச் செயற்படுகின்றமை மிக்க மகிழ்ச்சியளித்தாலும், கட்சி வேறுபாடின்றித் தம்மைப் பொதுவாகவே கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள் என்று அடையாளப் படுத்துகின்ற பலர், பாசிச மதங்களில் ஒன்றான அரேபியப் பாலைவனத்து மதத்தைப் பாதுகாக்க படாத பாடு படுவதும், அந்த மதத்திற்காக காவடியாடுவதும் மோசமான நயவஞ்சகம் ஆகும்.
.
.
மதச்சார்பின்மை முடிந்தவரை அதிக உறுதியுடன் கடைப்பிடிக்கப்படும் கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் தலிபானிய ஸ்டைல் சங்கித்தனத்தைக் காட்டப் போய் செருப்படி வாங்கி அவமானப்பட்டுப் போன சங்கிகள், 'கொவிட் 19 சமூக இடைவெளியைப் பேணவே தனித்தனி இருக்கைகள் அமைத்தோம்' என்று சப்பைக் கட்டுக் கட்டி இருக்கின்றார்கள். என்றாலும் 'கீழே விழுந்தும் மீசையில் மண் படவில்லை' ரக சப்பைக் கட்டுக்களையெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவேயில்லை. இதிலே ஆச்சரியமான ஒரு தகவலும் உண்டு, காவிச் சங்கிகளின் இந்தக் கலாச்சாரக் காவல் வேலையை பச்ச சங்கிகளும் ஆதரிக்கின்றார்கள் என்பதே அந்த ஆச்சரியம் ஆகும். நிறம் மாறினாலும் குணம் மாறாத சங்கிகள்.
.
கடைசியாக ஒரு கேள்வி : காவிச் சங்கிகள் செய்த இதே கலாச்சாரக் காவல் வேலையை, அல்லது இது போன்ற ஒரு வேலையை பச்ச சங்கிகள் செய்திருந்தால் கம்யூனிஸ்ட்டுகள் இதே விதமாகப் பதிலடி கொடுத்து எதிர்வினை ஆற்றி இருப்பார்களா? கம்யூனிஸ்ட் தோழர்கள் இதற்கு நேர்மையாகப் பதிலளிக்கலாம். கம்யூனிஸ்ட் தோழர்களே, "ஆம்" என்பது உங்கள் பதிலாக இருக்குமானால், அதற்குத் துணை ஆதாரமாக அண்மைக்கால உதாரணங்கள் ஒன்றிரண்டையாவது வழங்க முயற்சி செய்யுங்கள்.
-றிஷ்வின் இஸ்மத்
 22.07.2022
May be an image of 10 people, people standing, outdoors and text that says 'ஆண், பெண் மாணவர்கள் அருகருகே அமர்வது கலாச்சாரச் சீரழிவு என்று இருக்கைகளைப்ப பிரித்து வைத்தார்கள் சங்கிகள், சிந்தித்த ார்கள் மாணவர்கள் கலாச்சாரக் காவல் சங்கிகளுக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்கள் மாணவர்கள்! இன்னும் பலமாகப் பதிலடி கொடுத்தார்கள் மேயர் ஆர்யா ராஜேந்திரன்'

கருத்துகள் இல்லை: