Lulu Deva Jamla G : கள்ளக்குறிச்சி மேட்டர்ல நான் இதுவரை எந்த கருத்தும் சொல்லாமலே கடந்து போயிட்டு இருந்தேன். காரணம் அந்த புள்ளயோட அம்மா பேசுற ஒரு வீடியோவ பார்த்தப்போ என் உள்ளுணர்வு (intuition) எனக்கு சொன்ன ஒரு விஷயம்… “She is trying to manipulate the audience” அப்டீன்னு… அது பாலியல் துன்புறுத்தல் கொலையா தான் இருக்கணும்னு பார்க்கிறவங்களை யூகிக்க வைக்கிற மாதிரியான வார்த்தைக்கோவைகள் அந்தம்மா வாயில இருந்து வந்துது… ரொம்ப செயற்கையா புனையப்பட்ட ஒரு தொனியில…
அந்தம்மாவோட அழுகை கூட genuineஆ தெரியல எனக்கு (ஜெனுவினா இருக்கலாம்! ஆனா எனக்கு அப்டி தெரியலன்னு சொல்றேன்). அந்த புள்ளைய இந்தம்மா ஏதாவது வகையில (புதுசா ஒண்ணும் இல்ல, normalஆ எல்லா சராசரி இந்திய அம்மாக்களும் பண்ணுற மாதிரி தான் 😏) mental torture பண்ணி தான் அது கிட்ட தற்கொலை எண்ணத்தை தூண்டியிருப்பாகளோன்னு வரை தோண வச்சுது அந்த அம்மாவோட attitude in that video.
அந்த தோணல் உண்மை அல்லாததா கூட இருக்கலாம், ஆனா சாத்தியம் அல்லாதது இல்ல! இது அவங்க claim பண்ணுற மாதிரி கொலையா கூட இருக்கலாம், ஆனா அது கொலை அல்லாத பட்சத்தில், (இப்ப வெளிவந்திருக்கிற ஆதாரங்களின் அடிப்படையில் கொலையா இருக்க சாத்தியக்கூறு ரொம்ப குறைவாய் தான் தெரியுது) அந்த குழந்தையின் மரணத்துக்கு முழுக்காரணம்/ அடிப்படைக்காரணம் அதன் பெற்றோராய் இருக்கவே சாத்தியம். (பிகு:- சும்மா தாய்ப்பாசம்/ தாய்மை/ தியாகம் sentimentலாம் தூக்கிட்டு யாரும் வர வேணாம்! நாங்களும் ரெண்டு பசங்கள பெத்த ஒரு தாய் தான். எங்களுக்கும் தெரியும் அந்த நாசம்லாம்!😏)
ஏன்னா நம்ம நாட்டுல நடக்குற மாணவர்கள் தற்கொலைகளுக்கு முழு முதல் காரணம் அந்த குழந்தைகளுடைய பெற்றோர் மட்டுமே அப்டீன்னு என்னால அடிச்சி சொல்ல முடியும்! “எங்களோட எதிர்பார்ப்புகளை/ கனவுகளை நீ நிறைவேத்தலன்னா நீ என் புள்ளையே இல்ல”ன்னு சொல்லி புள்ளைங்க சிறகுகளை முளைக்கிறதுக்கு முன்னயே முறிச்சி போடுற கேடுகெட்டவிய்ங்க தானேடே நீங்கள்ளாம்? அப்பறம் அந்த புள்ளைக தங்களுடைய இயலாமைகளை/ கனவுகளை / பிரச்சனைகளை எப்டி உங்க கிட்ட வந்து பகிர்ந்துக்கும்? எல்லாத்தையும் மறைச்சி மறைச்சி வச்சி, மனசுக்குள்ள போட்டு அழுத்தி அழுத்தி வச்சி, கடைசியில அந்த மனஅழுத்தம் தாங்க முடியாம மாடியில இருந்து குதிச்சி செத்து போவ தான் செய்யும்!
பன்னெண்டாம் வகுப்பு ஃபெயில் ஆகிட்டேன்னு பேப்பர்ல ரிசல்ட் பார்த்து தெரிஞ்சிகிட்டு வீட்டுக்கே போவ மாட்டேன்னு எங்க பப்பம்மா வீட்டுல போயி ஒரு நைட்டு பூரா ஒளிச்சி கிடந்தவ நான்! எனக்கு தெரியும் அந்த feeling எவ்ளோ கொடுமையானதா இருக்கும்னு. இத்தனைக்கும் எங்க பப்பா மம்மி அவ்ளோல்லாம் என்னை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துனவங்க கிடையாது. ஆனா நான் மருத்துவம் படிக்கணும்னு ஆசை பட்டாக, அந்த எதிர்பார்ப்பை/ கனவை சின்ன வயசுல என் மண்டைக்குள்ள திணிக்க முயற்சி பண்ணாக என்கிறது உண்மை. ஸோ நான் ஃபெயில் ஆன விஷயம் அவங்கள கடுமையான ஏமாத்தத்துக்குள்ள தள்ளும் என்கிற எண்ணமே என்னைய அவ்ளோ மோசமான மனஅழுத்தத்துக்கு உட்படுத்திச்சின்னா மத்த குழந்தைகளோட நிலைமையை யோசிச்சி பாருங்க.
“நீ எப்டி படிச்சாலும் சரி, எப்டி வாழ்ந்தாலும் சரி, யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் சரி, நீ என் புள்ள தான். உன்னை நான் நேசிப்பேன்” அப்டீன்னு ஒரு unconditional loveஐ உங்க புள்ளைங்க கிட்ட காட்டினா அந்த புள்ளைங்க தங்களுக்கு இருக்கிற பிரச்சனைகள உங்க கிட்ட ஏன் மறைக்க போவுது? ஏன் மனஅழுத்தத்துக்கு ஆளாவ போவுது? ஏன் தன்னை தான் கொன்னுக்க போவுது? என்னைய கேட்டா உங்க நாட்டுல counselling and education தேவைப்படுறது குழந்தைகளுக்கு இல்ல, இந்த தடிமாடு பெற்றோருக்கு தான்.
முறையான குழந்தை வளர்ப்பு பத்தி சரியா பாடம் நடத்தி அதுல டெஸ்ட் வச்சி பாஸ் பண்ணுறவனுக மட்டும் தான் குழந்தை பெத்துக்க முடியும்னு சட்டம் கொண்டு வரணும். அவங்க பெத்துக்கிற குழந்தைகள் பாதுகாப்பான ஆரோகியமான சூழல்ல தான் வளர்க்கப்படுதா அப்டீன்னு கண்காணிக்க அரசு தரப்புல கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு regular monitoring பண்ணணும். குழந்தைகள குழந்தைகளா சக மனித உயிர்களா மதிக்காம தங்கள் உடமைகளா commodityயா treat பண்ணி அதுகள mentally ill ஆக்கி வாழ்க்கைக்கும் முடக்கி போடுற அல்லது இப்டி பிஞ்சுலயே சாவடிக்கிற பெற்றோருக்கு கேள்வியே இல்லாம மரண தண்டனை குடுக்கப்படணும்.
இதெல்லாம் நடக்காதுன்னு தெரியும், ஆனாலும் இப்டி குழந்தைகளின் மரண செய்திகள் காதுல விழுறப்ப எல்லாம் மனசு கிடந்து அடிச்சிக்குது… “ஐயோ! கொஞ்சூண்டு அறிவுள்ள பொறுப்புள்ள கவனமுள்ள ஒரு அம்மாவா அந்த குழந்தைகளோட அம்மாக்கள் இருந்திருந்தா இந்த சாவை தவிர்த்திருக்கலாமே!”அப்டீன்னு… இப்பவும் தொண்டை எல்லாம் அடைச்சிகிட்டு மூச்சு திணறுற ஒரு உணர்வோட கண்ணீர் பனிக்க தான் இதை எழுதிகிட்டு இருக்கேன்… சட்னு ஒரு சமூக மாற்றம் வந்துராதா ஆண்டவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக