Ashroff Ali-அஷ்ரப் அலீ : ரணில்-டளஸ் பலப்பரீட்சை! வெல்லப் போவது யார்?
இந்நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்று காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் தற்போதைக்கு டளஸ் மற்றும் ரணில் ஆகியோர் மட்டுமே பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு டளஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் அவர் தான் வெல்லக் கூடும் என்ற ஊகம் பலமாக எழுந்துள்ளது. அதே நேரம் இந்தியாவும் ரணிலுக்குப்பதில் டளஸ் ஐ வெல்ல வைப்பதில் தௌிவாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றது.
டளஸ் சீன சார்பு இடதுசாரி சிந்தனை கொண்டவர். அவர் பதவிக்கு வந்தால் சீனாவின் ஆதிக்கம் தான் இலங்கையில் மீண்டும் நிலைநாட்டப்படும். ஆனால் அவர் பெரியளவாக படிப்பறிவற்றவர் என்பதன் காரணமாக அவருடைய ஆட்சியில் இந்தியாவின் செல்லப்பிள்ளை சஜித்தைப் பிரதமர் ஆக்கிவிட்டால் அவரைக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை தம் கைப்பாவையாக ஆட்டுவிக்கலாம் என்பது இந்தியாவின் எண்ணமாகும்.
இந்தியாவின் சொற்படியே நடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் காரணமாகவே தம் எஜமானர்களின் கட்டளைக்கிணங்கி டளஸ் ஐ ஆதரிக்கத் தீர்மானி்த்துள்ளது. ஆனால் டளஸ் பதவிக்கு வந்தால் அவருக்குப் பின்னணியில் இருக்கும் இனவாதிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அவருக்கு இல்லை. அதன் காரணமாக எஞ்சியிருக்கும் சொற்ப உரிமைகளையும் சிறுபான்மை மக்கள் இழக்கும் நிலைதான் ஏற்படும்.
இந்நிலையில் தற்போதைக்கு முஷர்ரப், டக்ளஸ் (02) , சுதந்திரக் கட்சியின் ஒன்பது பேர், முஸ்லிம் காங்கிரசின் நஸீர் அஹமத், பிள்ளையான், விக்னேஸ்வரன், புத்தளம் அலி சப்ரி ஆகியோர் தற்போது வரைக்கும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டளஸ் ஐ ஆதரித்த காரணத்தினால் பொன்னம்பலம் தரப்பு ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ளது. அவர்களின் இரண்டு வாக்குகளும் ரணிலுக்கே கிடைக்கும்.
பதுளையின் அரவிந்தகுமார் தற்போதைக்கு தனது ஆதரவை ரணிலுக்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார். அவர் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. அதே போன்று மனோ கணேசன் கூட்டணியில் இருந்தும் ஒருவர் ரணிலை ஆதரிக்கவுள்ளதாக தகவல் அனுப்பியுள்ளார்.
டளஸ் வந்தால் தாங்கள் அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களாக, எந்த அதிகாரமும் அற்றவர்களாக இருக்க நேரிடும் என்ற பயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பதினைந்துக்கும் அதிகமானவர்கள் தற்போதைக்கு ரணிலை ஆதரிப்பதாக தூது அனுப்பியுள்ளனர்.அதன் மூலம் அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது அவர்களின் நோக்கமாக உள்ளது
இன்று மாலை விமல் வீரவங்ச தரப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் காரணமாக அரசாங்கத்துக்கு எதிரான சுயாதீன கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்தும் இரண்டுக்கும் குறையாத அளவிலானோர் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளனர்
விமல், அதுரலியே ரதன் (இவன் எல்லாம் ஒரு தேரர்?) மற்றும் உதயகம்மன்பில போன்ற இனவாதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்ற நிலைப்பாட்டின் காரணமாக அதாவுல்லாஹ்வும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
அதே போன்று கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இணைந்திருந்த முஸ்லிம் காங்கிரசின் இரண்டு உறுப்பினர்கள் இம்முறை ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க உறுதியளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது
ரிசாத் பதியுதீன் கட்சியின் நிலையும் அதுதான்.
இப்படியான நிலைமைகளின் காரணமாக தற்போதைக்கு ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் முன்னிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது
ஆனால் நாளை காலை ஒன்பது மணிவரை உறுதியான முறையில் எதனையும் எதிர்வு கூற முடியாதுள்ளது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக