புதன், 20 ஜூலை, 2022

இந்திய குடியுரிமையை துறக்கும் இந்தியர்கள் ஒரே ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர்

 Palanikumar M | Samayam Tamil:   : உள்துறை அமைச்சகம் மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, 2021 ஆம் ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாதது ஆகும். 78,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
இது மற்ற அனைத்து நாடுகளிலும் மிக உயர்ந்தது. இரட்டை குடியுரிமையை இந்தியா அனுமதிக்காது. சீனாவில் வசிக்கும் 362 இந்தியர்களும் சீன குடியுரிமை பெற்றுள்ளனர். ஃபஸ்லுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “தனிநபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை துறந்தனர்” என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
2018 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் குடியுரிமை விதிகளின் கீழ் XXII படிவத்தைத் திருத்தியது. "விண்ணப்பதாரர் வெளிநாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கும் இந்தியக் குடியுரிமையைத் துறப்பதற்கும் உள்ள சூழ்நிலைகள்/காரணங்கள்" என்ற பத்தியையும் சேர்த்தது.



குடியுரிமையை துறந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 23,533, கனடா- 21,597, யு.கே.-14,637, இத்தாலி-5,986, நெதர்லாந்து- 2187, நியூசிலாந்து- 2643, சிங்கப்பூர்- 2516, பாகிஸ்தான்- 2516, அமெரிக்கா-78,284. பாகிஸ்தான் 41 மற்றும் நேபாளம்-10.

2021 ஆம் ஆண்டில் அமைச்சகம் அளித்த பதிலில், 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குடியுரிமையை விட்டுக்கொடுத்த இந்தியர்களின் எண்ணிக்கை முறையே 1,33,049, 1,34,561, 1,44,017 மற்றும் 85,248 ஆக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: