வியாழன், 21 ஜூலை, 2022

புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஒன்றிய அரசு".. 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை!

 கலைஞர் செய்திகள்  : மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மோடி அரசு மிரட்டி வருகிறது என எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் மீண்டும் இன்று சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் 13 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இதையடுத்து புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு மிரட்டுகிறது என 13 எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் புலனாய்வு அமைப்பாளைக் கொண்டு ஒன்றிய அரசு மிரட்டி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்துப் பழிவாங்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கட்டவிழ்த்துள்ளது. இந்த மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்துவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டும் மோடி அரசு".. 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை!

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐம்மு& காஷ்மீர் தேசிய மாநாடு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ம.தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், வி.சி.க, சிவசேனா, ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: