Rajendran Ramalingam : இவங்க என்ன மரச்செக்கு எண்ணெய்தான் பாரம்பரியம்னு சொல்லிட்டு ஆளாளுக்கு செக்கு எண்ணெய் வாங்கப்போறேன்னு கிளம்புறாங்க?...
மரச்செக்கு எண்ணெய்னா,
செக்குல ஒரு ஆளு உட்கார்ந்து ஆட்டி குடுப்பாங்கன்னு நினைச்சுட்டு இருக்காங்களா?...
அந்த எண்ணெயை ஆட்டுறதுக்கு பெரிய, பெரிய இயந்திரங்கள் எல்லாம் இருக்கு...
அதுதான் எண்ணெய் ஆட்டி குடுக்கும்.
இவங்க கற்பனை பண்ற மாதிரி செக்குல ஒரு பாட்டி உட்கார்ந்து பாட்டு பாடிட்டே எண்ணெயெல்லாம் ஆட்டித் தர மாட்டாங்க....
எங்களது குல தொழிலே
எண்ணெய் தயாரித்து விற்பனை செய்வதுதான்..
ஒரு உண்மையை சொல்கிறேன், நாங்கள் எவ்வளவு சுத்தமாக எண்ணெய் தயார் செய்தாலும், ஆய்வகத்தில் கொடுத்து ஆய்வு செய்தால், "இது உணவுக்கு உகந்தது அல்ல" என்றே ஆய்வறிக்கை தெரிவிக்கும்.
எனது தந்தை இது குறித்து "மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகுவார்"....
"நாம ஒரு தப்பும் பண்ணலயே, ஏன் இப்படி வருது" என்று வேதனை படுவார்..
பின்னர்தான் தெரிய வந்தது,
மரச்செக்கில் எண்ணெய் தயாரிக்கும்போது, வெப்பம் அதிகம் இல்லாததால், கடலை, மற்றும் எள்ளில் உள்ள நீர்ச்சத்தும் சேர்ந்து இறங்குவதால், எண்ணையில் நீர் சேர்ந்து "free fatty acid" எனப்படும் *கொழுப்பு சத்து*உண்டாகி,எண்ணெய் விரைவில் கெட்டுவிடும் என்பதையும் பின்னரே அறிந்தோம்...
இப்போது பொய்யான விளம்பரங்களினால், அதை தூக்கி பிடித்து நிற்கின்றனர்.
என்னுடைய ஐம்பது ஆண்டு அனுபவத்தில் சொல்கிறேன்
"உண்மை இதுதான்"..
ஆனா ஒன்னு, இவங்கள வச்சு அவங்க நல்லா கல்லா கட்டுறாங்க....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக