சனி, 23 அக்டோபர், 2021

அ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை!

 Rayar A -   Oneindia Tamil :  s சென்னை; அ.தி.மு.க நிர்வாகியும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான இளங்கோவன் வருவாயை விட 131% அளவுக்கு சொத்துக்குவிப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்ககளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் ரூ.29 லட்சம் பணம், 21 கிலோ தங்க நகைகள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்ட்டதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:.

அ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் அ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் துணைத்தலைவரும் ஆர்.இளங்கோவனின் மகன் இ.பிரவீன்குமார் ஆகியோர்கள் அவர்களுடைய பெயரிலும்,
அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் 23 இடங்களில் சோதனை 23 இடங்களில் சோதனை
ஆர்.இளங்கோவன் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 21.10.2021 ம் தேதியன்று சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

விசாரணையின்போது நேற்று சென்னையில் 3 இடங்கள், கோயம்புத்தூர் - 1 இடம் , நாமக்கல் - 3 இடங்கள் , முசிறி ( திருச்சி ) - 6 இடங்கள் மற்றும் சேலம் - 23 இடங்கள் ஆக மொத்தம் 36 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ரூ.70 கோடி முதலீடு ரூ.70 கோடி முதலீடு அதன் தொடர்ச்சியாக சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.5.5 லட்சம் மதிப்பிலான அந்நிய செலவாணி, ரூ.25 கோடி மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள், ரூ.45 கோடி மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு நகைகடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள் இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் விசாரணை தொடர் விசாரணை இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது


கருத்துகள் இல்லை: