செவ்வாய், 19 அக்டோபர், 2021

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தார்

May be an image of 2 people, people standing and text that says 'Erik Solheim @ErikSolheim Great meeting with Stalin! It was such a pleasure to meet the chief minister of Tamil Nadu. Great discussion on how India and Tamil Nadu can ead the world during the green shift- treeplanting, electric vehicles, solar energy, green hydrogen. Inspiring! 0 Tweet your reply'
aruvi.co : இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் நோர்வே குழுவின் விசேட தூதராக இருந்த எரிக் சொல்ஹெய்ம் ,தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினாா்.
தமிழக முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகின் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் பசுமை செயற்றிட்டங்களில் இந்தியா மற்றும் தமிழ்நாடு எவ்வாறு முன்னிலை வகிக்க முடியும்? என்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக எரிக் சொல்ஹெய்ம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இந்தச் சந்திப்பின் போது இந்தியாவுக்கான நோர்வேதூதா் ஹன்ஸ் ஜேகப் பிஃரைடன்லண்ட், தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், பொதுத்துறை செயலாளா் டி.ஜெகநாதன், சென்னையில் உள்ள நோர்வே கெளரவத் தூதா் அரவிந்த் கோபிநாத் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
எரிக் சொல்ஹெய்ம் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் தலைவராகவும்,நோர்வே அமைச்சராகவும் இருந்தவா். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்துள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்ற

கருத்துகள் இல்லை: