மாலைமலர் : ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.
புதுடெல்லி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கொடநாடு வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றும் கொடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது என கூறிய நீதிபதிகள் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபப் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக