Velmurugan P - tamil.oneindia.co : சென்னை : என்னிடம் மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை, சசிகலாவிடம் இருந்து எனக்கே மீட்டுக் கொடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கங்கை அமரன் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
2017-ம் ஆண்டு சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தினர்.
அப்போது நடத்திய ஆவணங்கள் அடிப்படையில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூ. 300 கோடி ரூபாய் சொத்துகளைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர்.செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூர் பங்களா 100 கோடி மதிப்புடையது இந்த பங்களா சசிகலாவிற்கு தொடர்புடையது. இந்நிலையில் பையனூர் பங்களா வாசலில் பினாமி சட்டத்தின் கீழ் சொத்து முடக்கப்பட்டிருப்பதாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதுவரை சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்புடையதாக கருதப்படும் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பினாமிதடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த சொத்துக்கள் தொடர்பான விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிவின் அடிப்படையில், முடக்கப்பட்ட சொத்துகள் தவறுகள் இல்லை என்றால் உரிமையாளரிடம் திருப்பித் தரப்படும் அல்லது அரசு ஏலம் விடும் எனவே என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னரே தெரியும். தற்போதைய நிலையில் பங்களாவைப் பயன்படுத்தலாம். ஆனால், விற்கவோ, அடகுவைக்கவோ முடியாது. . 1994-ல் வாங்கப்பட்ட இடம் அது.
இதனிடையே பையனூர் பங்களா, தன்னுடைய சொத்து என்றும்,. அதை , தன்னிடமிருந்து சசிகலா தரப்பு மிரட்டி வாங்கியதாக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் பலமுறை கூறியிருக்கிறார். இப்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஏக்கர் நிலமுடைய பையனூர் பங்களா சொத்தினை 1994ல் சசிகலா குடும்பத்தினர் வெறும் 24 லட்சத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட அந்த பங்களாவை தனக்கே மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கங்கைஅமரன் இதுதொடர்பாக அவரை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
49 ஏக்கரில் அமைந்துள்ள பையனூர் பங்களாவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கங்கை அமரன் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். தன் மனைவி பெயரில் ஆசை ஆசையாக அந்த சொத்தை சசிகலா தரப்பு வற்புறுத்தியும் மிரட்டியும் கேட்டதால் 1994ல் எழுதி கொடுத்ததாக கங்கை அமரன் குற்றம்சாட்டி உள்ளார். வெறும் 24 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு தற்போது 100 கோடி என்று சொல்கிறார்கள். ஆனால் சரியான உண்மை விலை தெரியவில்லை. இதனிடையே அந்த பங்களாவை எப்படியாவது மீட்க வேண்டும் என்று தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவும் தயாராகி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக