வெள்ளி, 10 செப்டம்பர், 2021

ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?

"ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?
"ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?
கலைஞர் செய்திகள் : சிப் பற்றாக்குறை காரணமாக கார் நிறுவனங்களில் ஒரு பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆட்டோ மொபைல் துறைகளில் எலெக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் விலை உயர்ந்த கார்களில் எலெக்ட்ரானிக்ஸ் சிப் (Chip) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக எலெக்ட்ரானிக்ஸ் தேவையும் அதிகரித்துள்ளது.
சிப் தயாரிப்பில் முக்கிய நாடாக தைவான் உள்ளது. தற்போது அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் சிப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிப் தயாரிக்க அதிகமாக தண்ணீர் தேவைப்படும் என்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் சிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது வரக்கூடிய ஆண்டுகளில் இந்த துறைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதே ஃபோர்டு, வோக்ஸ்வாகன் மற்றும் டைம்லர் உள்ளிட்ட கார் உற்பத்தியாளர்கள் உலகளாவிய சிப் பற்றாக்குறையின் தாக்கத்தை உணர்ந்துள்ளனர். ஏனென்றால் தற்போது இந்த நிறுவனங்களின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மின்சார வாகனங்கள் அதிகரிப்பதாலும் இந்த பற்றாக்குறை அதிகரித்துள்ளது. உதாரணமாக ஃபோர்டு 300 சிப்களை பயன்படுத்துகிறது. இதுவே புதிய மின்சார வாகனம் என்றால் 3 ஆயிரம் சிப் வரை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சிப் பற்றாக்குறை காரணமாக செப்டம்பர் மாதத்தில் மொத்த கார் விற்பனை 1.80 லட்சம் முதல் 2.15 லட்சம் வரை மட்டுமே இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மேலும் பெரிய கார் நிறுவனங்கள் கூட தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுவது மாருதிதான். இந்த நிறுவனம் செப்டம்பரில் 60 சதவீத உற்பத்தியை குறைத்துள்ளதால் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட பல கார் நிறுவனங்களும் தங்களின் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.

"ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?

மேலும் சிப் பற்றாக்குறை காரணமாக கார்களை வாங்கப் பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த பற்றக்குறையால் இந்த மாதத்தில் மட்டும் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: