ZEE தமிழ் - Vidya Gopalakrishnan : பஞ்சஷீர் பகுதியில் தாலிபான்கள் மற்றும் வடக்கு கூட்டணிக்கு இடையிலான போரில், தாலிபான்கள் பஞ்சஷீரை கைப்பற்றியதாக வதந்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமித்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அமெரிக்க படைகளும் முழுமையாக வெளியேறி விட்டன.
ஆனாலும், ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்களால், இன்னும் புதிய அரசை அமைக்க முடியவில்லை.
தாலிபான் பயங்கரவாதிகள் பஞ்சஷீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைய முயன்றாலும், வடக்கு கூட்டணியின் பலமான எதிர்ப்பால் அவர்களால், முன்னேற முடியவைல்லை.
பஞ்சஷீர் போரில் வெற்றி பெற முடியாத தாலிபான்கள் (Taliban) வடக்கு கூட்டணியின் மன உறுதியை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். ஒருபுறம், பஞ்சஷீரின் 4 மாவட்டங்களை தாங்கள் ஆக்கிரமித்துள்ளதாக தாலிபான்கள் கூறுகின்றனர், அதே நேரத்தில் வடக்கு கூட்டணியின் சார்பில், முன்னாள் துணை அதிபர் அமருல்லா சலேஹ், பஞ்சஷீர் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுவது, முற்றிலும் தவறான செய்தி என்று கூறுகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக