செல்லபுரம் வள்ளியம்மை : அண்மையில் மறைந்த இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் ராஜேந்திரன் ராஜ மகேந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல பெருமைக்கு உரிய செய்திகளை தன்னகத்தே கொண்டதாகும்
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் ராஜ மகேந்திரனின் பங்கு பிரமிக்க தக்கதாக உள்ளது.
1930 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மூளாய் என்ற கிராமத்தில் இருந்து சுப்பிரமணியம் மகாதேவன் என்ற இளைஞரும் . கொக்குவில் என்ற கிராமத்தில் இருந்து சின்னத்தம்பி மகாதேவன் என்ற இளைஞரும் கொழும்புக்கு வேலை தேடி வந்தனர்
அவர்களுக்கு இரு அமெரிக்க கம்பனிகளில் வேலையும் கிடைத்தது got jobs in two associated American companies named L.D. Seymous and Dodge and Seymour
சரியாக ஒன்பது வருடங்களுக்கு பின்பு இரண்டாம் உலக போர் ஆரம்பமானது
அதன் காரணமாக அந்த இரு கம்பனிகளின் பங்குகளையும் இந்த இரு இளைஞர்களுக்கு விற்று விட்டு அந்த அமெரிக்கர்கள் சென்றுவிட்டனர்
1939 ஆம் ஆண்டு இந்த இரு கம்பனிகளும் இந்த இளைஞர்களின் கைகளுக்கு வந்தது
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கம்பனிகளின் பங்குகளை வாங்கிய இலங்கையர்கள் என்ற பெருமையையும் இவர்கள் பெற்றார்கள்
இவர்களின் முதலாவது கம்பனி பெயரை o ‘L.D. Seymour Company Mahadevan Limited’ என்று மாற்றினார்கள்.
இரண்டாவது கம்பனியான (The Dodge and Seymour Company name was changed to Rajendrans Limited) ராஜேந்திராஸ் (Parker Pens, Quink Ink, Colgate-Palmolive, Yale products, Champion Spark Plugs and Thermos Flasks) பார்க்கர் பேனா . குயிக் இங். கோல்கேட் பால்மொலிவ் . யேல் பொருட்கள் . சாம்பியன் ஸ்பார்க் பிளக்ஸ். தெர்மோ பிளாஸ்க் போன்றவற்றை உற்பத்தி செய்தார்கள்
1940 இல் இலங்கையின் முதல்தர விநியோக நிறுவனமாக மகாராஜா ஆர்கனைசேஷன் என்ற கம்பனியை நிறுவினார்கள்.
1957 ஆம் ஆண்டு திரு சின்னத்தம்பி மகாதேவன் காலமானார் . அவருக்கு வாரிசுகள் இல்லாமையால் முழு கம்பனியும் ராஜேந்திரனின் நிர்வாகத்தில் வந்தது
இதே ஆண்டு இலங்கையில் முதல் முறையாக மகாராஜா நிறுவனம் பி வி சி பைப் உற்பத்தி செய்தது S. Rajendran introduced to Sri Lanka for the first time the use of PVC water pipes.and the Parker Quink Ink Factory in 1958. In 1962, he began producing ICL cosmetics and in 1963 he commenced factories manufacturing cutex, lipstick and nail polish.
1966 இல் திரு ராஜேந்திரன் காலமானார்
திரு ராஜேந்திரனின் மறைவுக்கு பின்பு மகாராஜா நிறுவனத்தின் முழு பொறுப்பும் கிளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட திரு ராஜேந்திரன் ராஜமகேந்திரன் கைகளுக்கு வந்தது.
மிக சிறுவயதில் இந்த பெரிய பொறுப்பை வெகு திறமையாக நிர்வகித்து தொழில் துறையில் ஒரு பாய்ச்சல் வேகத்தை காட்டினார்
துணி ஏற்றுமதி ரத்தினக்கல் ஏற்றுமதி நகை ஆபரண ஏற்றுமதி . தேயிலை உற்பத்தி. சர்க்கரை உற்பத்தி போன்றவற்றை வெற்றிகரமாக விரிவு படுத்தினார்கள்
1978 இல் இலங்கையில் முதல் முதலாக கம்பியூட்டர் IBM 36 விற்பனையிலும் சுழி போட்டார்கள்
ஜெ ஆர் ஜெயவர்தனாவல் அறிமுகப்படுத்த பட்ட திறந்த பொருளாதார கொள்கையை மிக சரியாக பயன்படுத்தினார்.
இலங்கையில் முதல் வெளிநாட்டு மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையை Prima Wheat Flour Factory in Trincomalee was set up by the Maharaja Organisation நிறுவினார்கள்
இன்னும் இங்கே நான் குறிப்பிடாத ஏராளமான தொழில் துறைகளில் விரிவு படுத்தினார்கள்
இலங்கையில் மிக பிரமாண்டமாக வளர்ந்து வந்த கிளி ராஜமகேந்திரனின் வளர்ச்சிக்கு பேரிடியாக ஜூலை கலவரம் இடம்பெற்றது
மகாராஜா நிறுவனத்தின் பல கட்டிடங்கள் தொழில்கூடங்கள் எரித்து சாம்பலாக்க பட்டது
இரண்டு கட்டிடங்கள் மட்டுமே மிஞ்சியது
ஆனால் விழுந்த வேகத்திலேயே நிமிர்ந்து எழுந்தது மகாராஜா நிறுவனம் .
1985 ஆம் ஆண்டிலேயே பல தொழில் கூடங்கள் மீண்டும் இயங்க தொடங்கின
உண்மையில் ஒரு பீனிக்ஸ் பறவையின் எழுச்சிக்கு இது ஒப்பானது.
இப்போது முன்னை விட அசுர வேகத்தில் மகாராஜா நிறுவனம் பாயத்தொடங்கியது
நியூசிலாந் அங்கோர் பால் நிறுவனத்தோடு கூட்டாக இலங்கையில் பால் வர்த்தகத்தில் வெற்றிகரமாக தடம் பதித்தது.
சிங்கப்பூர் நிறுவனத்தின் கூட்டு முயற்சியோடு டெலிகாம் துறையிலும் தொலைக்காட்சி வானொலி துறைகளிலும் அடியெடுத்தது வைத்தது மகாராஜா நிறுவனம்.
இன்று இலங்கையில் முதல்தர தொலைக்காட்சி சேவையாக சக்தி டிவி சிரஸா டிவி நியூஸ் first மற்றும் வானொலி என்று ஊடக துறையிலும் முதல் இடத்தில்தான் இருக்கிறது மகாராஜா நிறுவனம்
இலங்கை கிரிக்கெட் துறையின் வரலாறு எழுத்துவதாயின் கிளி ராஜமகேந்திரனின் பங்களிப்பையும் எழுதித்தான் தீரவேண்டும்
அவருக்குள் இருந்த திரைப்பட ஆசை காரணமாக பாலாஜியோடு கூட்டு சேர்ந்து ரஜினி காந்த் நடித்த தீ படத்தையும் தயாரித்தார் அது வெற்றி படம்தான் ஆனாலும் அதற்கு பின்பு அவர் அதில் தொடர்ந்து ஈடுபடவில்லை
மகாராஜாவின் சிங்கள தொலைக்காட்சிகளில் எக்கச்சக்கமான ரியாலிட்டி ஷோக்களும் சீரியல்களும் வர்ண கனவுகளும் ஒவ்வொரு குக்கிராமத்தையும் இணைத்து கொண்டிருக்கிறது
வெறுமனே தொழில்துறை சாதனைகள் மட்டுமே ராஜா மகேந்திரனிடம் இருந்திருந்தால் நான் நிச்சயம் இக்கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன்
கிளி ராஜ மகேந்திரன் என்ற மனிதரை பற்றி எழுதவேண்டும் என்ற ஆவல்தான் இவற்றை எல்லாம் எழுத வேண்டும் என்று என்னை தூண்டியது
The founder of the Gammadda concept for ‘the forgotten people’ of this country was none other than Rajamahendran.
இலங்கையின் ஊடகங்கள் சாதாரண வறுமையான மக்கள் வாழும் கிராமங்களை எட்டி பார்ப்பது அரிதிலும் அரிது
அவர்களின் அடிப்படை தேவைகள் கூட பொதுவெளிக்கு வராமல் கேட்பார் யாருமின்றி இருந்த காலம் ஒன்றிருந்தது
இந்த நிலையை முறியடித்து அவர்களின் வாழ்வில் தன்னால் முடிந்த அளவு வெளிச்சத்தை கொண்டுவரவேண்டும் என்று கிளி ராஜமகேந்திரன் அவர்கள் பெரு முயற்சி செய்தார்
அவரது சிங்கள தமிழ் தொலைக்காட்சிகள் இளைஞன் கிராமங்களை பொதுவெளிக்கு தினமும் கொண்டு வருகிறது.
வர்த்தக நோக்கங்களை தாண்டி இவர்களின் தொலைக்காட்சிகளும் வானொலியிலும் செயல்படுகின்றன என்றெண்ணுகிறேன்.
அவரை பற்றி எத்தனோ செய்திகளை நான் கேட்டிருக்கிறேன்
அவற்றை எல்லாம் எழுத்தாவதாயின் பெரிய புத்தகமாக எழுதவேண்டும்.
இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு இவரை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல்கள் நடந்தன.
இவரின் சமரசமற்ற அரசியல் கருத்துக்கள் இவருக்கு அதிகமான எதிரிகளை எப்போதும் உருவாக்கி கொண்டே இருந்தது. இவருக்கு கிங் மேக்கர் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஆட்சிகளை உருவாக்குவதில் அல்லது கலைப்பதில் இவரது ஊடங்கள் பெரும் பங்கை எப்போது ஆற்றிக்கொண்டே இருந்தது
ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தனது ஊடகங்களின் முனைகளை ஒரு போதும் இவர் மழுங்கடித்ததில்லை
அதனால் எதிரிகளுக்கு பஞ்சமும் இல்லை.
இவரின் பன்முக ஆளுமை பற்றி பெரிதாக ஒருவரும் இன்னும் எழுதவில்லை என்றெண்ணுகிறேன்
அதற்கு காரணமும் உண்டு
இவர் அரசியல்வாதிகள் பலரின் எதிர்ப்பு உரியவராகவே இன்னும் இருக்கிறார் போலும்
அதிகாலை 4.39 மணிக்கு எழுந்து இரவு 11 மணிவரை ஓயாது உழைத்து கொண்டிருப்பவரை பற்றி சுலபத்தில் எழுதி விடமுடியாது
மகாராஜா நிறுவனத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக ஒரு சாதாரண மனிதரை அழைத்த்திருந்தார்
1983 ஜூலை இறுதி கலவரத்தில் மகாராஜாவின் தலைமை செயலகம் முற்று முழுதாக எரிந்தது
அப்போது அங்கு பணியாற்றிய ஒரு சிங்கள பணியாளர் கொடுப்பனவுக்கு இருந்த கரன்சி நோட்டுக்களை ஒரு சூட்கேசுக்குள் வைத்து தனது வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டார்
சுமார் பத்து நாட்களின் பின்பு ராஜமகேந்திரனின் வீட்டிற்கு வந்து கரன்சி நோட்டுக்கள் அடங்கிய சூட்கேஸை
கொடுத்தார் .. அந்த பணியாளர்தான் அந்த பிரதம விருந்தினர்
இன்னுமொரு சம்பவம் நான் நன்றாக அறிந்தது.
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு தமிழ் இளைஞர் வசமாக போலீடம் மாட்டுப்பட்டு விட்டார்.
அந்த இளைஞரின் போதாத காலம் சந்தர்ப்ப சாட்சியங்கள் எல்லாமே அவருக்கு எதிராகவே இருந்தது
அவரது கதை முடிந்தது என்று பலரும் பேசிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
அந்த இளைஞரின் அண்ணனுக்கு ஏதோவொரு அதிஷ்டத்தால் ராஜமகேந்திரனை அணுகும் வாய்ப்பு தொலைபேசியில் கிட்டியது .. தயங்கி தயங்கி தனது சொந்த விடயத்தை கூறினார்
முன்பின் தெரியாதவர் . அதிலும் மிகப்பெரிய தொழிலதிபர் . இதுபோன்ற விடயங்களில் காது கொடுத்து கேட்பரோ என்பதெல்லாம் எண்ணாமல் கூறினார்
அதிசயங்கள் சில நேரம் நடப்பதுண்டு அல்லவா
ராஜமகேந்திரன் இந்த இளைஞரின் கதையை காது கொடுத்து கேட்டார்
பின்பு தனது புரோட்டோ கால் எல்லாவற்றையும் ஒருபக்கம் வைத்துவிட்டு
மிக ஆத்மர்த்தமாக வேலை பார்த்தார் . அன்றய அதிபர் வரைக்கும் சென்றார்
இறுதியில் அந்த இளைஞர் விடுதலை ஆனார்!
அமரர் திரு. கிளி ராஜ மகேந்திரன் பற்றிய இச்சிறு பதிவு மூலம் எனது அன்பான புகழாஞ்சலியை செலுத்துகிறேன்
.
Subramaniam Mahadevan - Sinnathamby Rajandram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக