hindutamil.in : பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களின் தாக்குதலை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “பஞ்ச்ஷீர் மாகாணத்திலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. அங்கு தலிபான்கள் நடத்திய தாக்குதல் கடுமையான கண்டனத்துக்குரியது. தலிபான்கள் பேச்சுவார்த்தை மூலம் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல. ஆப்கானிஸ்தான் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவதற்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஈரான் ஆதரவாகச் செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தலைநகர் காபூலை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.
இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மலைப் பகுதியிலிருந்து தலிபான் எதிர்ப்பு தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் அகமது மசூதுவும், ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவும் தலிபான்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். போரை எதிர்கொள்ளத் தயார் என்று அறிவித்தனர். இதில் நடந்த சண்டையில் தலிபான்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக