tamil.indianexpress.com : இது ஒவ்வொருவருக்கும் குறைந்து வரும் வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தேசத்தை பிரதிபலிக்கிறது, அடையாளத்தின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அடைய அவர்களை ஊக்குவித்து அதை சமூக நீதி என்று அழைக்கிறது என்று பிரதாப் பானு மேத்தா எழுதியுள்ளார்.
பிரதாப் பானு மேத்தா, கட்டுரையாளர்
மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி இரண்டும் கேலிக்குரிய கருத்துக்களாக மாறிவிட்டன. இதன் புதிய மற்றும் தெளிவான வெளிப்பாட்டை நீங்கள் காண விரும்பினால், தென் மாநிலங்களால் நிறுவப்பட்ட புதிய பிராமணர் நலத் திட்டங்களைப் படியுங்கள்.
தெலங்கானா பிராமணர் சம்க்ஷேம பரிஷத், அல்லது andhrabrahmin.ap.gov.in அல்லது கர்நாடக மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியத்தின் இணையதளங்களில் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது.
அம்மாநிலங்கள் ஒவ்வொன்றும் பிராமணர் நலனுக்காக ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர் அல்லது ஆதரித்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை, வெளிநாட்டு கல்விக்கான உதவி, தொழில் தொடங்குவதற்கான நிதி, பிராமணர் சுய உதவி குழுக்களுக்கான உதவி, பயிற்சிக்கான பணம் என பல நன்மைகள் உள்ளன. அரசு அனைத்து சமூகங்களிலும் உள்ள ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
ஆனால், முன்மொழியப்பட்ட இந்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பு மதிப்புகளின் கோரமான வக்கிரமாக இருக்கிறது. அவைகளின் சாதியின் மோசமான அம்சங்களின் ஒரு பிற்போக்குத்தனமான மாற்றமாக இருக்கிறது. ஆந்திரப் பிரதேச அரசு வேதக் கல்விக்கான வேத வியாசர் திட்டத்தை கொண்டுள்ளது. வேதக் கல்வியை ஆதரிக்கும் அரசுக்கு மதச்சார்பற்ற கற்பித்தல் வாதம் இருக்கிறதா என்ற கேள்வியை சிறிது ஒதுக்கி வைப்போம். ஆனால், இந்த கல்விக்கு யார் தகுதியானவர்?
மாணவர்கள் பிறப்பால் பிராமணர் சமூகத்தைச்
சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இதேபோன்ற
இணையான திட்டங்களில் தகுதி பெறுவதறு அவர்களுடைய திட்டங்களுக்காக பிராமண
சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது. 21ம் நூற்றாண்டில் பிறப்பால் தகுதியை
நிர்ணயிக்கும் ஒரு தொழிலுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது என்ற கருத்தைவிட
கொடூரமான ஏதாவது ஒன்றை நீங்கள் சிந்திக்க முடியுமா? வேதக் கல்வி புனிதமனாது
நல்லது என்றால் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அது ஏன் அனைவருக்கும்
திறக்கப்படக்கூடாது? பிறப்பால் அடையாளம் காணப்பட்ட பிராமணர்களுக்கு
மட்டுமா? அரசு எப்படி பாகுபாடு காட்ட முடியும்?
அடையாளங்கள் மற்றும் குறியியல்கள் மோசமாகிறது. தெலங்கானா அரசின் Brahminparishad.telangana.gov.in பெருமையுடன் அறிவிக்கிறது. பிராமணர் என்பது பரந்த மற்றும் புத்திசாலித்தனமான சிந்தனை, வாழ்வில் நீதியுள்ள மதம், சாதுர்யமும் ஆளுமையில் சாகசமும், பண்பில் நேர்மையும் மனிதநேயமும், நடத்தையில் புதுமையும் தொழிலில் செயல்திறனும் அணுகுமுறையில் புதுமையும் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகிறது.
ஹரித்துவாரில் உள்ள சில பண்டிதர்களைப் போல, தெலங்கானாவில் அந்த அரசு பிராமண சாதி சான்றிதழ் வழங்குவதற்கான படிவம், கோத்ரம் விவரங்களைக் கேட்கிறது. வேத வியாசரின் பெயரிடப்பட்ட ஆந்திர திட்டத்தில் நிச்சயமாக ஒரு பெரிய முரண்பாடு அல்லது ஆழமான வரலாற்று அறியாமை உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான ஒரு பிராமணராக வேத வியாசர் கருதப்பட்டிருக்க மாட்டார். குறைந்தபட்சம் மகாபாரதம் பிராமணத்தை நடத்தையால் அல்லாமல் பிறப்பால் நியமிப்பது பற்றி சற்று சங்கடமாக இருக்கிறது. ஆனால், இங்கே ஒரு நவீன மதச்சார்பற்ற அரசு சாதி பிறப்புரிமையுடன் செல்கிறது.
சில பிராமணர்கள் வறுமையில் உள்ளனர் மற்றும் உதவி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஏன் சாதி அடிப்படையில் ஒரு திட்டம் கிடைக்க வேண்டும்? உதாரணமாக, சிறந்த முன்மொழியப்பட்ட (தெலுங்கானாவின் பிராமண தொழில்முனைவோர்) திட்டம் உள்ளது. இது ரூ .2 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு தொழில் முனைவோர் ஆக உதவியை வழங்குகிறது. இது தகுதியுள்ள இலக்கு. ஆனால், பாகுபாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தலுக்கு குறிப்பாக கூடுதல் அடிப்படை இல்லை என்றால், மறைமுகமாக ஷரத்து 14ன் கீழ் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இதற்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.
பிராமணர் என்ற அடிப்படையில் ஐ.ஏ.எஸ் பயிற்சி, சுயஉதவிக் குழு உருவாக்கம் அல்லது வெளிநாட்டு கல்விக்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? கர்நாடக மாநிலம் இப்போது பிராமணர்களுக்கு மணப்பெண்களுக்கான நிதி ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது. அவர்களை கண்டுபிடிக்க கடினமாக இருப்பதாகத் தெரிகிறது. இது வேத மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளின் ஆகிய இரண்டின் மொத்த வக்கிரம்.
‘தலித்’ என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் பயன்படுத்த முடியும் என்றால், ஏன் பிராமணர் என்ற வகைப்படுத்தலின் பயன்படுத்தக்கூடாது? என்ற வாதம் வைக்கபடும். ஆனால், இது மண்டலுக்கு பிந்தைய இயக்கத்தில் அமைந்த சமூக நீதி உரையாடலின் வக்கிரம். ஆழமாக வேரூன்றிய வரலாற்று பாகுபாடு பற்றிய கேள்வி பொதுவாக பின்தங்கிய நிலை மற்றும் வறுமையுடன் குழப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதியின் பரவலான யதார்த்தத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அது தலித்துகள் அல்லது இதே போன்ற விதிவிலக்கான பிரிவுகள்இல் தவிர, மாநிலத்தால் பின்தங்கிய நிலையை அடையாளம் காண சாதியை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பின்பற்றப்படுவதில்லை. ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவ இந்த திட்டங்களில் வழங்கப்பட விரும்பும், மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை, கல்வி உதவித்தொகை, வருமான உதவி, வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், கடன்கள் என கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களும் சாதியைக் கேட்காமல் உள்ளடக்கப்பட வேண்டிய அனைவரையும் உள்ளடக்கும்.
ஆனால் இது அரசியலில் பிரதிபலிக்கும் பின்னடைவை நினைத்துப் பாருங்கள். பாகுபாட்டை வெல்ல சாதியை அங்கீகரிப்பது ஒரு விஷயம். ஆனால், அதை ஒரு கட்டாய அடையாளமாக நிலைநிறுத்துவது, அரசால் சான்றளிக்கப்படுவது மற்றும் பிறப்பு அடிப்படையிலான உரிமைகளை மறு உற்பத்தி செய்வது சமூக நீதியின் வக்கிரம். அரசியலும் பொதுக் கொள்கையும் மிகவும் அபத்தமான முறையில் ஜாதி அடிப்படையிலான அணிதிரட்டலாகக் குறைக்கப்படுகிறது. தலித்துகள் தங்கள் சாதியால் ஏழைகளாக இருந்தனர். அதனால்தான், அவர்கள்ன் சாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது அரசு ஏழைகளாக உள்ள அனைவரும் அதிகாரப்பூர்வ முத்திரையால் அவர்களின் சாதியுடன் நிரந்தரமாக முத்திரை குத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறது. 2 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ளதா? நன்மைகளைப் பெற தயவுசெய்து பிராமணர் சாதிச் சான்றிதழைப் பெறுங்கள். மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, நீங்கள் பிராமணராக இருந்தால், நாங்கள் உதவ முடியும். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவை இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங்களாக இருக்கின்றன.பொதுப் விநியோகப் பொருட்கள் வழங்கலிலும் தலித்துகளைச் சேர்ப்பதிலும் அவைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், அரசியல் கட்சிகள் முழுவதிலும் முதலமைச்சர்கள், தங்களை பழைய கால இந்து மன்னர்களாக, ஜாதி முறையைப் பின்பற்றி, ஜாதியால் நன்மைகளைப் பகிர்ந்துகொள்வது போல் தெரிகிறது. சாதியை வெல்லும் விடுதலைப் பார்வை இங்கே இல்லை. அதை சமாளிக்க நீங்கள் சாதியைக் கடந்து செல்ல வேண்டும் என்ற லோகியாவின் சிந்தனை சமூகவியலின் விருப்பமான சிந்தனையின் ஒரு பகுதியாக மாறி வருகிறது.
ஆனால் மதச்சார்பின்மை பற்றியும் சிந்தியுங்கள். முரண்பாடாக, ஹஜ் யாத்திரைக்கான மானியங்கள் திரும்பப் பெறப்பட்டது போல, நீங்கள், மதச்சார்பின்மையை பெருமளவில் அழித்துவிட்டீர்கள். இந்திய மதச்சார்பின்மையில் கோளாறுகள் இருந்தன. அவை சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போலி மதச்சார்பின்மை பற்றி அதிகம் பயிற்சி செய்பவர்கள், மதச்சார்பின்மை பற்றி கவலைப்படுவதில்லை; மதச்சார்பின்மை அழிப்பு தடையில்லாமல் செல்லும்போது சிறுபான்மையினரை களங்கப்படுத்தவும் குறிவைக்கவும் அவர்கள் அதை ஒரு சாக்காக பயன்படுத்துகின்றனர்.
அனைவருக்கும் இலவசம் என்பது சாதி அடிப்படையிலான பலன்களை மறுசீரமைப்பதாகத் தொடர்கிறது. உள்ளூர் பகுதியில் இட ஒதுக்கீட்டின் கோரிக்கைகள், பொருளாதாரம் பற்றிய அவநம்பிக்கையின் அறிகுறிகளாக உள்ளன. தற்போதைய குறையும் வேலைகள் மற்றும் வளங்களை ஜாதி வழிகளில் எவ்வாறு விநியோகிப்பது என்பது பற்றி அதிக சூட்டை உருவாக்குகின்றன. ஆனால், உள்ளீடுகள் நமக்குத் தேவையான அளவுக்கு வேகமாக வளரவில்லை என்ற உண்மையைப் பற்றி யாரும் தீவிரமாக வருத்தப்படுவதில்லை. பிராமணர்களுக்கான நன்மைகள் நமது அரசியலின் ஒரு குறைபாடு விளம்பர அபத்தம் போல் தோன்றலாம். இது ஒரு சிறிய கேலிக்கூத்து. ஆனால், அதன் பின்னால் ஒரு பெரிய சோகம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் குறைந்து, குறுகிய மனப்பான்மை கொண்ட அடையாளங்களை அடைய அவர்களை ஊக்குவித்து அதை சமூகநீதி என்று அழைக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக