மெகபூபா முஃப்தி, பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரில் செய்த தனது தவறை (சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது) சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்
கூட்டம் ஒன்றில் பேசிய மெகபூபா முப்தி, ஆப்கன் நிலவரத்தையும், காஷ்மீரையும் ஒப்பிட்டு பேசியது, கிளர்ச்சியை தூண்டும் வகையில் இருந்தது என்பது பாஜக குற்றச்சாட்டாக உள்ளது.
மெகபூபா முப்தி அக்கூட்டத்தில் பேசியது இதுதான்: ஜம்மு காஷ்மீர் மக்கள் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு பொறுமை இல்லாமல் போகும் நாள், நீங்கள் அழிந்துபோய் விடுவீர்கள். எனவே, ஜம்மு -காஷ்மீர் மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் Kashmir உள்ளிட்ட Muslim நிலங்களையும் விடுதலை பெற செய்ய வேண்டும் | . நமது சுற்றுப்புறத்தில் [ஆப்கானிஸ்தான்] என்ன நடக்கிறது என்று பாருங்கள். இவ்வளவு பெரிய சக்தியாக இருக்கும் அமெரிக்கா கூட தங்கள் பைகளை மூட்டை முடிச்சு கட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
வாஜ்பாய் மாதிரி
பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மறைந்த, அடல் பிஹாரி வாஜ்பாய் எப்படி செயல்பட்டாரோ அப்படி இப்போதுள்ள அரசு செயல்பட வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது; உங்களை திருத்துங்கள். இவ்வாறு மெகபூபா முப்தி பேசினார்.
மத்திய அமைச்சர் பதிலடி
அதேநேரம், இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலடி கொடுத்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சதவீதம் கூட சகிப்புத்தன்மை இருக்க கூடாது என்ற அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி நம்புகிறார். இந்த உறுதியின் காரணமாகத்தான், இந்தியாவும் அதன் மக்களும் முன்னேறிச் செல்கின்றனர். ஆனால், முப்தியின் பேச்சு, தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்று முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மேலும், "இந்திய முஸ்லிம்களை விட்டு விடுங்கள் என்று தாலிபான்களை கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவிலுள்ள மசூதிகளில் தொழுகை நடத்துபவர்கள் தோட்டாக்கள் மற்றும் குண்டுகளால் தாக்கப்படுவதில்லை. இங்கு பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்கவில்லை, அவர்களின் தலை மற்றும் கால்கள் வெட்டப்படவில்லை. எனவே இந்திய முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்போம் என்று கூறுவதை நிறுத்துங்கள். இந்திய முஸ்லீம்களை நிம்மதியாக வாழ விடுங்கள்" என்று முக்தார் அப்பாஸ் நக்வி மேலும் தெரிவித்தார்.
டிஜிபி ஆய்வு
இதனிடையே காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங், நேற்று குல்கம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இப்பகுதியில் சமீபத்தில் நடந்த அரசியல் கொலைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். "தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்கும் அனைத்து சந்தேகத்திற்கிடமான விஷயங்களும், அவர்களின் முயற்சிகளும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அரசியல் கொலைகள்
இந்த ஆண்டு இதுவரை, குல்காம் மாவட்டத்தில் தங்கள் கட்சி தொண்டர்கள் 9 பேர் கொல்லப்பட்டதாக பாஜக தலைவர் அல்தாஃப் தாக்கூர் குற்றம்சாட்டிய நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் பகுதியில், பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதாவை கொலை செய்த வகீல் ஷா உட்பட மூன்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக