வெள்ளி, 2 ஜூலை, 2021

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உடல் எரிந்த நிலையில் மீட்பு.. ஆராய்ச்சி மாணவர்

Velmurugan P  - tamil.oneindia.com :  சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாக தெரிகிறது
மெட்ராஸ் ஐஐடி என்று அழைக்கப்படும் சென்னை ஐஐடி உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். இந்தியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள நிறுவனமும் கூட. ஆனால் இங்கு இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவரான கொச்சியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் எரித்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் உள்ளது
அவரது உடலை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை எரிந்த நிலையில் இருந்த மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. மாணவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தகவல்கள் தெரியவரவில்லை. இந்த சம்பவத்தால் சென்னை ஐஐடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜினாமா முன்னதாக சென்னை ஐ.ஐ.டியில் இன்று காலை சாதிய பாகுபாடு இருப்பதாக கூறி உதவி பேராசிரியர் விபின் பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கனவே இங்கு பணியாற்றிய பேராசிரியர் வசந்தா கந்தசாமி இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

ராஜினாமா உதவிப் பேராசிரியரான விபின் இமெயில் அனுப்பிய கடிதத்தில், சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம், ஜாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால் தம்மால் இங்கு பணிபுரியவே இயலாத நிலை உருவாகிவிட்டது; ஆகையால் தாம் பணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில தான் மாணவர் ஒருவர் இறந்திருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாணவி தற்கொலை மாணவி தற்கொலை ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டியில் சில மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி பாத்திமா லத்தீப் மரணம் நாட்டையே உலுக்கியது. அதேபோன்று தற்போதும் ஒரு மாணவர் இருந்திருப்பது  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
l
 

கருத்துகள் இல்லை: