கலைஞர் செய்திகள் : மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வரும் ஐந்து அல்லது ஆறாம் தேதி மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசி இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வீணாகும் மழைநீரை சேமிக்க பாலாறு இணைப்பு திட்டம்; 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை - அமைச்சர் துரைமுருகன்
வேலூரில் இன்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை சார்பில் ,வேலூர் மாவட்ட வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் தேவராஜ் கார்த்திகேயன் ஈஸ்வரப்பன். நல்லதம்பி. வில்வநாதன் அம்லு. கிரி . ஜோதி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் வணிகர்கள் ஒன்றிய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,
மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வரும் ஐந்து அல்லது ஆறாம் தேதி ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு ஜல்சக்தி துறை ஒதுக்கியுள்ள 3,700 கோடி ரூபாய் நிதி போதியதாக இல்லை எனவே இது குறித்தும் ஒன்றிய அமைச்சரிடம் பேசி உரிய நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
“வீணான அரசியல் நடத்துகிறார்கள்; மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம்” : அமைச்சர் துரைமுருகன் உறுதி !
“வீணான அரசியல் நடத்துகிறார்கள்; மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம்” : அமைச்சர் துரைமுருகன் உறுதி !
சென்னையில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் திருப்பி விடுவதற்காக தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் நோக்கமே வறண்ட பகுதி செழிப்பான பகுதியாக மாற்றுவதாகும்.
பாலாற்றில் தடுப்பணைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக ஆறு தடுப்பு அணைகள் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும் நிதிநிலை அறிக்கையில் இதனை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக இந்த ஆண்டு இரண்டு அல்லது மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என துரைமுருகன் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக