Vigneshkumar - tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கப்படும் எனத் தெரிவித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், +2 பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
அலறிய நபர்.. கோயம்பேடு பாலத்தில் ஓடும் கார் திடீரென தீ பிடித்த கொடூரம்.. பரிதாப பலி.. எப்படி நடந்ததுஅலறிய நபர்.. கோயம்பேடு பாலத்தில் ஓடும் கார் திடீரென தீ பிடித்த கொடூரம்.. பரிதாப பலி.. எப்படி நடந்தது
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிபிஎஸ்இ மாணவர்களுக்க ு +2 மதிப்பெண்கள் வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறையை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எனவே +2 மதிப்பெண்கள் வெளியான பின்னரே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சில தனியார் கல்லூரிகள் இப்போதே மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளனர். அது தவறு. +2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழக்கமான முறைகளைப் பின்பற்றியே நடத்தப்படும். சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் என எல்லாம் ஒரே மதிப்பெண்தான். அதில் யார் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனரோ அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள முறையில் திருப்தியடையாத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கா மாணவர் சேர்க்கை நிறுத்தப்படாது. வழக்கமாக ஜூலையில் கல்லூரிச் சேர்க்கை முடிந்த ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் தொடங்கப்படும். இப்போது கொரோனா காலம் என்பதால், ஒரே மாதம் மட்டும் தாமதமாக கல்லூரிகள் தொடங்கப்படும்.
நீட் தேர்வு தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுஶ்ஶசுய இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும். ஏற்கனவே, கடந்த முறை திமுக ஆட்சியில் கல்லூரிகளுக்கு இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளோம். அதேபோல நீட் தேர்வையும் ரத்து செய்யச் சட்டம் இயற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக