Muralidharan Pb : சென்ற 2006-2011 வரை திமுக ஆட்சி முடிந்த போது தமிழ்நாட்டின் நிதிச்சுமை ஏறத்தாழ 55000 கோடி ரூபாய்.
அதாவது பல்வேறு திட்டங்களை தீட்டி மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாட்டை ஒரு வளர்ந்த மாநிலமாக ஆக்கிட திமுக அரசு பெற்ற கடன். இன்று சுமார் 5 லட்சங்கோடி.
அதாவது மாநிலத்தின் இரண்டு ஆண்டு வரவு செலவு தொகை!
மொட்டையாக தமிழ்நாட்டில் அரசின் கடன் 5 லட்சம் கோடி ஏறிவிட்டது என்று சொல்லாதீங்க!
எப்படி? என்ன ?ஏது ? என்று விவரமாக சொல்லுங்க.
சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செலவு மற்றும் தணிக்கை குழு அறிக்கையின்படி,
2018-19ல் மட்டும் மின்சாரம் வாங்கியது, நிலக்கரி, நிதி அளித்தல், ஊழியர்கள் சம்பளம் இவை அனைத்தையும் அதிகரித்ததால் போன்றவைகளை முந்தைய அதிமுக அரசு செய்த தவறால் தமிழ்நாடு பகிர் மின் கழகம் எனப்படும் TANGEDCO என்கிற அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 13,176 கோடி பணத்தை நேரடியாக நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது சிஏஜி அறிக்கை.
நேரடியாக அந்த ஆண்டின் நிதிச்சுமையை 4,862 கோடிக்கு அதிகரித்துள்ளது
முந்தைய அதிமுக அரசின் தவறான பாதையால் இவ்வளவு பெரிய இழப்பை மாநில அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது என்கிறது செலவு மட்டும் தணிக்கை குழுவின் அறிக்கை.
மின்சாரப் பயன்பாடு மேற்கொண்டு 7,396 கோடிகளை விழுங்கி அதிகப்படியான மின்சாரக் கொள்முதலையும் உற்பத்தியையும் செய்துள்ளதால் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
2014-2019 வரை வீணாக 4000 கோடிகளுக்கு மேல் நிலக்கரி பயன்பாட்டிற்கு செலவழித்துள்ளது மின்சார வாரியம் என்கிறது சிஏ ஜி .
2317 கோடிக்கு மட்டும் அதிகப்படியான நிலக்கரியை வாங்கி குவித்துள்ளது அந்த 5 ஆண்டுகளில். அதாவது TNERC என்ற அரசு நிறுவனத்தின் நிர்ணயித்த அதிகப்படியான கொள்முதலை விட அதிகமாக வாங்கியுள்ளது.
மின்சார வாரியத்தின் தவறால், 2012 கோடிகளுக்கு மேல் வெப்பம் குறைவான தரமுள்ள நிலக்கரியை வாங்கியதால் மட்டும் செலவாகியுள்ளது என்கிறது சிஏஜி.
மேலும் 171 கோடிக்கு மட்டும் தரமற்ற நிலக்கரி வாங்கியதால் 2014-2019 ஆண்டில் மட்டும் நட்டம்..
மிக முக்கியமாக தனது சொந்த உற்பத்தியை தனது நிறுவனங்களின் வழியே தயாரிக்காமல் தனியாரிடம் வாங்கியதால் அதுவும் அதிக விலைக்கு வாங்கியுள்ளது.
.
அதோடு மட்டுமல்லாமல், மின்சார வாரியம், நேரம் தவறி மின்விநியோகம் செய்த இரு நிறுவனங்களிடம் இருந்து, இழப்பீடு தொகையை ஏதும் பெறாமலேயே அவர்களிடம் மின்சாரம் வாங்கியது அதுவும் அதிக விலைக்கு வாங்கியது மிகப்பெரிய சட்ட விதி மீறல்.
சி ஏ ஜி மேலும் ஒரு பெரிய குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தை நோக்கி தந்துள்ளது. அதாவது செட் டாப் பெட்டிகள் வழங்கிய நிறுவனங்கள் நேரம் தவறி அளித்ததற்கு அவர்கள் மீது எந்த அபராதமும் விதிக்கவில்லை என்கிறது.
மிக்ஸி.மின் விசிறி திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி மேலும் 124 கோடிகளை வீண் அடித்து அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு மின்சாரத்துறையில் இவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்படியுள்ளது என்று உத்தேசமாக சொல்லவில்லை. ஊர்ஜிதப்படுத்தியுள்ளது தணிக்கை அறிக்கை.
அப்படியானால் நாம் அவசியம் பேசி அலச வேண்டிய பேசு பொருள் இது மட்டுமே, தேவையில்லாத விவரங்களை நாம் பேசி பேசி நேர விரயம் செய்யக் கூடாது. மின்சார உற்பத்தியை செய்யாமல் இப்படி நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படுத்தியே மின் வாரியத்தை மொட்டை அடித்துள்ளது முந்தைய அதிமுக அரசு.
இவ்வளவு வீண் செலவு செய்ததற்கு பதிலாக 34000 கோடி செலவழித்து பல்வேறு வகையில் மின்சார உற்பத்தியை பெருக்கியிருக்கலாம். நாம் நமது மாநில மின்சார உற்பத்தியில் ஒரு பகுதியை வெளி மாநிலங்களுக்கு விற்று இருக்கலாம். எந்த ஒரு அறிவுடைய மின்சாரத் துறை அமைச்சரும் இதையே செய்திருப்பார்கள்.
நட்டம் ஏற்படுத்தியதில் எவ்வளவு கையூட்டு என்பது பற்றி தற்போதைய திமுக அரசு துறை ரீதியாக விசாரணை அமைக்க தனியாக ஒரு நீதிமன்றம் அமைத்து துரிதமாக முடித்து விவரங்களை வெளியிட்டு குற்றம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும்.
Courtesy: Business Standard
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக