இங்கு 'சராசரி' என்ற வார்த்தையை 'குடும்பம்' என்னும் கட்டமைப்புக்குள் சுழலும் பெண்கள் என்பதாக எடுத்து கொள்ளலாம்.
இதில் பெண்ணிய சிந்தனை கொண்ட பெண்கள், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள், career objective பெண்களை விட்டுவிடலாம்.
இந்த இரண்டு வகை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக மிக சமீபத்திய உதாரணங்களாக கேரளா பெண்களை எடுத்து கொள்ளலாம். விசாமையா மற்றும் Aanie.
எங்கள் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளரத்திறுக்கிறோம் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு பிறந்தவள் விசாமையா. அந்த சுதந்திரம் எது வரை என்றால் தன் துணையை, matrimonial ல் தன் சாதியை சேர்ந்தவனாக பார்த்து தேர்ந்தெடுத்து கொள்வது வரை.
சீரும் சிறப்புமாக திருமணம் நடந்த பின்னர், கணவன் கொடுமைப்படுத்த விசமயவும் அதை மறைக்காமல் தன் குடும்பத்தாருக்கு தெரிவித்திருக்கிறார். மகள் 'வாழாவெட்டியாய்'! வீட்டில் இருப்பதை விட அடிவாங்கி கொண்டு கணவனுடன் இருப்பதே மேல் என்று நினைத்த பெற்றோர்களை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
ஒருவேளை விசாமையா மேட்ரிமோனியளில் பார்க்காமல், வேறு சாதியை சேர்ந்த ஒரு ஆணை காதலித்து இருந்தால், ஆனி போல வீட்டை விட்டு துறத்தப்படிருக்கலாம். அப்படி வீட்டை விட்டு வெளியேறிய ஆனி , ஒரு குழந்தைக்கு பிறகு கணவனால் கைவிட படுகிறாள். பெற்றோர்களால் மீண்டும் ஏற்க மறுக்கப்படுகிறாள். பாட்டியின் துணையால் தங்க இடம் கிடைக்க, அதில் முன்னேறுகிறாள்.
இங்கு ஆனிக்கும் விசமாயாவிற்கும், இந்த சமூகம் கல்வி என்னும் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. அது, பெண்கள் படிக்கவேக்கூடாது என்ற சமூகத்தில், பல முற்போர்களார்களின் போராட்டதால் கிடைத்த உரிமை. ஒருவேளை அந்த உரிமை கிடைக்க வில்லை என்றால் ஆணியும் விசாமயவும் ஒரே முடிவை சந்திந்திருக்கலாம். அல்லது ஆனி ஒரு கூலி தொழிலாளியாக வாழ்ந்திருக்கலாம்.
இப்போது அவர்கள் இருவரும் உணர்த்துவது கல்வி கற்றால் மட்டும் போதாது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை தான்.
இருவரின் கல்வி தகுதி குடும்ப பின்னணி அணைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, மேற்சொன்ன ஒரு சராசரி குடும்பமாக மட்டும் பார்க்கலாம்.இருவரும் பெற்றோர்களால் ஆசையாக வளர்க்கப்படுகிறார்கள்.
பெற்றோர் தேர்ந்தெடுத்து ஆணை திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு சீறும் சிறப்புமாக திருமணம் நடைபெறுகிறது. தானே தன் துணையை தேர்ந்தெடுத்த பெண் பெற்றோர்களால் புறக்கணிக்கப்படுகிறாள். இவர்கள் இருவரும் ஏதோ ஒருவகையில் நமக்கு உறவினர் என்று வைத்து கொள்வோம். நமக்கு ஆணியை விட விசாமையாவைதான் பிடித்திருக்கும்.
விசாமையா தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டாள். தன் கணவன் தன்னை துன்புறுதிய பொழுதும் அதை தன் பெற்றோர்களுக்காக பொறுத்து கொண்டாள். உயிரையும் கொடுக்க துணிந்தாளே ஒழிய தன் பெற்றோரின் சொல்லை மீறவேயுல்லை.
ஆனியோ தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதற்கான தண்டனையாக கணவனால் புறக்கணிக்க படுகிறாள். பெற்றோரின் சாபம் பலித்துவிட்டது. அதனால் நமக்கு விசாமையாவை தான் பிடிக்கும்.
ஆனால் கல்வி என்ற உரிமை ஆனியின் வாழ்வை மாற்றி அமைக்கிறது. விசமாயாவின் தியாகத்தை புகழ்ந்த சுற்றதால் ஆனியின் முன்னேற்றத்தை வியந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் விசாமையா இங்கு பொதுவான பெண். ஆனி ஒரு ஆச்சர்யம். துணையில்லாமல் ஒற்றை ஆளாய் முன்னேறும் ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்போதும் ஒரு ஆச்சர்யம் தான்.
ஆனியும், விசாமயவும் இந்தியா இல்லை உலக பெண்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு. மேலை நாடுகளில் விவாகரத்து சாதாரணம். விவாகரத்து பெற்ற ஒரு பெண், இந்தியா போன்று அல்லாமல், மேலை நாடுகளில் புறக்கணிக்கப்படுவதில்லை. துன்பமான ஒரு திருமணத்தில் வாழாமல் வெளியில் வாருங்கள் என்றே ஊக்கப்படுத்தகிறாராகள். அவர்களுக்கு என்று counselling எண், helpline என்று பல வசதிகள் இருக்கிறது. அப்படி இருந்தும் பல பெண்களும் வெளிவர மறுக்கிறார்கள் என்பது, வெளிநாடுகளில் நம்மை போன்ற கலாச்சாரம் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கும் கலாச்சார காவலர்களுக்கு / முன்னோடிகளுக்கு பெருத்த ஆச்சர்யமாகாதான் இருக்கும்.
ஒரு சராசரி இந்திய பெண்ணைவிட அதிக சுதந்திரம் கொண்ட ஒரு ஆஸ்திரேலியா பெண் கூட தன் துன்பமான திருமண வாழ்க்கையில் இருந்து வெளிவர யோசிக்கிறாள். முன்பு காவல்துறையில் வேலை பார்த்த ஒரு நண்பர் சொன்னது. பக்கத்து வீட்டில் சத்தமாக இருக்கிறது, உடனே வாருங்கள் என்று தகவல் வர நண்பரும் சென்றருக்கிறார். கதவை திறந்த பெண்ணின் கண்கள் வீங்கி போய் மூக்கில் இருந்து ரத்தம் வந்துருக்கிறது. வீட்டின் சுவரின் ஓட்டை ( அது செங்களால் காட்டிய வீடு இல்லை). கணவன் இவரை கண்டதும் எந்த வித பதட்டமும் இல்லாமல் உள்ளே சென்று விட்டார். அந்த பெண்ணை மீட்டு அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கணவன் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார். வழக்கு விசாரணைக்கு வர, அந்த பெண் நீதிபதியிடம் தன் கணவன் தன்னை அடிக்கவும் இல்லை துன்புறுதியதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நீதிபதி நண்பருக்கு நீதிமன்றத்தின் நேரத்தை வீண் செய்ததற்காக அபராதம் விதித்திருக்கிறார். இதுதான் மேலை நாட்டின் பெண்களின் நிலை.
இப்போதும் கூட நாம் ஆனியையும் விசாமையாவை பற்றி தான் பேசுவோம். அவர்களின் கணவர்களை பற்றி பேச மாட்டோம். விபச்சாரத்தில் கைதாகும் அழகிகளை போல.கூடவே கைதாகும் ஆண்களை பெற்றி பேசுவதோ இல்லை அவர்களுக்கு ஒரு பெயரிட்டோ அழைப்பதில்லை. வாழாவெட்டி போல.
ஆணியை பாரட்டும் நாம் நம் மனசாட்சியின் முன் முற்போக்கு என்னும் போலி முகமூடியை கழட்டிவிட்டு அம்மணமாய் நின்றால் தெரியும் நமக்கு ஆனியை விட விசாமையாவையே அதிகம் பிடிக்கும் என்று. இந்த சமூகம் அதைத்தான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது.ஆணி நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றை தான். பெண்ணின் முதற் தேவை கல்வி மட்டுமே.
'ஒரு வீட்டில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால், முதலில் அந்த பெண்ணே தான் படிக்க வைக்க வேண்டும்' தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக