Shankar A : பாஜகவின் ஒரு மூத்த தலைவர் சொன்னது.
சிவசங்கர் பாபாவின் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிக்கு அந்த தலைவர் லோக்கல் கார்டியன். ஒரு சனிக்கிழமை அவர் அந்த மாணவியை சந்திக்க சென்றபோது, மாணவி பாபாவோடு திருப்பதி சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.
லோக்கல் கார்டியன்கிட்ட சொல்லாம யாரை கேட்டுட்டு பொண்ணை திருப்பதி கூட்டிட்டு போனீங்க என்று, அவர் கத்தி கூப்பாடு போட்டதும்,
மறு நாள் பெண்ணை வரவழைத்து டி.சி குடுக்க சொல்லி விட்டார்கள்.
இது நடந்தது 2019-2010. அப்போது இவ்விவகாரம் பெரும் சிக்கலானதும், பல மாணவிகள் டி.சி வாங்கிக் கொண்டு வெளியேறினார்கள்.
அதிலும் பல பாதிக்கப்பட்ட மாணவிகள் இருந்தனர். அந்த ஆண்டு டி.சி வாங்கிய பட்டியலை எடுத்தாலே பல உண்மைகள் வெளி வரும்.
ஆனால் இது தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இதில் பல மாணவிகள் வெளிநாடுகளில் இப்போது இருப்பதால், இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளும், பெற்றோரும் சாட்சியம் அளிக்க ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பாபாவை காப்பாற்ற கேடி.ராகவன் அல்ல. மோடியே வந்தாலும் ஒன்றும் நடக்காது. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சிவசங்கர் பாபாவைப் போல நாளை மீண்டும் ஒருவன் உருவாகாமல் இருக்க, பெற்றோருகளும், மாணவிகளும் சிபி சிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்குவது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக