Kandasamy Mariyappan : தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு...,
தமிழ்நாட்டில் இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, சில காரணங்களுக்காக அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர்.! மகிழ்ச்சியாக இருக்கிறது.!
அதே நேரத்தில், பல அரசு பள்ளிகளில் PG/PT Assistant ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கிறது.! ஆசிரியர்கள் இல்லை என்ற நிலை அந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை விரக்தியில் தள்ளி விடும்.!
அதேவேளையில்,
MSc/MA MEd, BSc/ BA BEd முடித்துவிட்டு வேலையில்லாமல் பல இளைஞர்கள் உள்ளனர்.!
காலி பணியிடங்களுக்கு, அரசின் நிதிச் சுமையும் ஒரு காரணமாக இருக்கும்.!
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதான்.!
திராவிட பொருளாதார அடிப்படையில்.,
PT Assistant 20,000 - 25,000 ரூபாய், PG Assistant 25,000 - 30,000 ரூபாய் என்று தொகுப்பூதியத்தில் (Consolidated pay) பல ஆசிரியர்களை நியமிக்கலாம்.! அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும்.
ஒருவேளை இது அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை தருமே என்று நீங்கள் எண்ணலாம்.!
55 வயதை கடந்த பல ஆசிரியர்கள் பணியில் இருப்பது உங்களுக்கு தெரியும்.!
அவர்களுக்கு விருப்ப பணி ஓய்வு கொடுத்துவிட்டு (VRS) அந்த செலவில் 4 ஆசிரியர்களை நியமிக்கலாம்.!
2024 முதல் ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு வயதை 52 என்று குறைத்து, முன்பு கூறிய அதே தொகுப்பூதியத்தில் மேலும் பல இளைஞர்களை ஆசிரியர் பணியில் அமர்த்தலாம்.!
(52 வயதிற்கு பிறகு அவர்களின் பொருளாதார தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்து கொள்ளலாம் அல்லது Tution எடுக்கலாம்.!)
இப்படி செய்வது,
படித்து முடித்த சில வருடங்களிலேயே பல இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வாங்கும் சக்தியை உருவாக்குவதன் மூலமாக பொருளாதார கட்டமைப்பை பெருக்க உதவும்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக