ஞாயிறு, 27 ஜூன், 2021

டீம் 16".. தமிழ்நாட்டின் எதிர்காலமே இனி "இதுதான்".. முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கமிட்டி.. பின்னணி!

 Shyamsundar - tamil.oneindia.com :   சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் கொரோனா காரணமாக வருவாய் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வருவாயை பெருக்க புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு காரணங்களால் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. கொரோனா, கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள், அதிக விலைக்கு விடப்பட்ட டெண்டர், ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காதது,
சர்வதேச பொருளாதார சரிவு, லாக்டவுன் என்று பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது
இந்த நிலையில் தமிழ்நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர உடனடியாக புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், புதிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


எப்படி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதற்காக ஏற்கனவே திட்டக்குழு கமிஷன் புதுப்பிக்கப்பட்டு அதன் துணை தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு பக்கம் நோபல் பரிசு பெற்ற எஸ்தர், ரகுராம் ராஜன் ஆகியோர் அடங்கிய முதல்வருக்கான ஆலோசகர் குழு உள்ளது. அதெல்லாம் போக தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனும் பொருளாதாரம் தெரிந்த வல்லுநர். இதனால் கண்டிப்பாக தமிழ்நாடு பொருளாதாரம் விரைவில் மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்பு இந்த நிலையில்தான் வருவாயை பெருக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டு கொண்டு வர்ம முடிவில் உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் சுற்றுலாத்துறையை பெரிய அளவில் வளர்க்க அரசு முடிவு செய்துள்ளது. கோவில்களை புதுப்பிப்பது, மலைக்கோவில்களில் ரோப் கார் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

பணிகள் இன்னொரு பக்கம் மலைவாசத்தலங்களை சரி செய்வது, அங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் வகையில் விளம்பரங்களை செய்வது போன்ற பணிகளும் தொடங்கி உள்ளது. முக்கியமாக சென்னை முதல் குமரி வரை இருக்கும் வங்கக்கடல் பகுதிகளை சரி செய்து புதிய சுற்றுலாத்தலங்களை அமைப்பது, வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சரி செய்து, வெளிநாட்டு மக்களை அதிகம் வர வைக்கும் வகையில் விளம்பரம் செய்யும் திட்டங்களில் அரசு உள்ளது

கமிட்டி இதற்காக 16 பேர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டிதான் டூரிஸத்தை தமிழ்நாட்டில் மீட்டு கொண்டு வரும் பணியில் உள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலாத்துறை மொத்தமாக நசிவடைந்துவிட்டது. இதை மீட்கும் பணியில் அரசு உள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், டிராவல் நிறுவனங்கள் என்று பல அமைப்புகளுடன் ஆலோசித்து சுற்றுலா தொடர்பான விளம்பரங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

உலக வருமானம் சுற்றுலாத்துறையை புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த கமிட்டி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளன. தாய்லாந்தின் ஜிடிபியில் 12% சுற்றுலாத்துறையை நம்பி உள்ளது. குரோஷியா ஜிடிபியில் 20% சுற்றுலாத்துறை, லெபனான் ஜிடிபியில் 15% சுற்றுலாத்துறை, கம்போடியா ஜிடிபியில் 16% சுற்றுலாத்துறை, ஜார்ஜியா ஜிடிபியில் 19% சுற்றுலாத்துறை, மாலத்தீவு ஜிடிபியில் 60% சுற்றுலாத்துறை வருமானம் ஆகும்.

வருமானம் கொரோனாவிற்கு பின் வரும் வருடங்களில் சுற்றுலாத்துறையை நம்பியே தமிழ்நாட்டின் பெரிய அளவு வருமானம் இருக்க போகிறது என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் வருமானங்களை நம்பாமல் சுற்றுலா, சுரங்கத்துறை வருமானங்களை நம்பும் முடிவில் அரசு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்காகவே 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

1 கருத்து:

Agni Rama சொன்னது…

கட்டுமர குடும்பத்தினர் அபகரித்த சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழ் நாட்டின் கடன்களையெல்லாம் அடைத்து விடலாம்