சனி, 19 ஜூன், 2021

இந்த விஷயத்திலுமா.. ஆபாச மதன் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. மிரண்டு போன போலீசார்

 Hemavandhana -  tamil.oneindia.com :  சென்னை: சென்னை கொண்டுவரப்பட்ட பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதில், பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைனில் ஆபாசமாகப் பேசி பேசியே கோடி கோடியாக சம்பாதித்துள்ளார் மதன்..
தன்னை எல்லாம் போலீசாரால் பிடிக்கவே முடியாது என்று கெத்து காட்டி கொண்டிருந்தார்.. கடைசியில் மதனை சிக்க வைத்ததே அவர் அப்பாதான்.
அவர் கொடுத்த தகவலின்படிதான், தர்மபுரி ஹோட்டலில் பதுங்கி இருந்தவரை கொத்தாக அள்ளி தூக்க வந்தனர் நம் போலீசார்.
இவரிடம் இரவெல்லாம் விடிய விடிய விசாரணை நடந்தது.. அப்போது, போலீசாரிடம் மதன் அளித்த பல்வேறு விஷயங்கள் தொடர்பாக வாக்குமூலம் தந்துள்ளார்.. அந்த வாக்குமூலங்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.. மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் நேரம்.. இவர் ஆன்லைனில் இருக்க இருக்க, பணம் கொட்டி கொண்டே இருக்குமாம்..


விளையாட வரும் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளார். இவர் மனைவியின் பேங்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது... இதுபோக, தாம்பரம், பெருங்களத்தூரில் 45 லட்சம் மதிப்பில் இரு சொகுசு பங்களாக்கள் மற்றும் 2 சொகுசு கார்கள் வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.. பணத்தை பெரும்பாலும் தங்கம், வைர நகைகளில் முதலீடு செய்துள்ளார். இதையெல்லாம் கேட்டு போலீசார் ஆடிப்போய் விட்டனர்..

இந்த தகவல் குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க போகிறார்களாம். அதேபோல, மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால்கூட உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்... ஒருவேளை ஏமாந்தவர்கள் புகார் அளிக்க முன்வந்தால், அதன்பேரிலும் நடவடிக்கை எடுத்து, உரியவர்களிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்னொரு விஷயம் தெரியவந்துள்ளது.. யூடியூப் மூலமாக மதன் சம்பாதித்த பணத்திற்கு, வருமான வரி ஒழுங்காகவே செலுத்தவில்லையாம்.. முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு செய்துள்ளார்.. அந்த பணத்தை மொத்தமாகவே முதலீடுகளில் போட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது

ஆனால், இதுவரை அவர் சம்பாதித்த தொகை எவ்வளவு, அதற்கு செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதுதான் தெரியவில்லை.. நிறைய லாபம் சம்பாதித்துள்ளதால், அதுகுறித்தெல்லாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..,.. அதனால், இதன் மூலம் மதன் மீது வரி ஏய்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.. இதனிடையே, ஜூலை 3-ம் தேதி வரை மதனை ஜெயிலில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: