சனி, 19 ஜூன், 2021

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்! லண்டனில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கு கொள்கிறார்?

 Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: டெல்லி பயணம் முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் லண்டன் போக போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
இதற்கு என்ன காரணம்? ஏன் முதல்வர் வெளிநாடு செல்கிறார்? ஆட்சிக்கு வந்த இந்த 2 மாத காலமாகவே திமுக, கொரோனா தடுப்பு விவகாரங்களை தீவிரமாக கையிலெடுத்தது..
மற்றொது புறம், தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லி பயணம் அமைந்தது.. எந்த ஆட்சியாக இருந்தாலும் பதவியேற்ற ஒரு மாதத்தில் டெல்லி சென்று, பிரதமர், உள்துறை மற்றும் முக்கிய துறைசார்ந்த அமைச்சர்களை சந்தித்து, தங்களது மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு வாங்கி வருவது வழக்கம்.
தொற்று ஆனால், இங்கு தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால், டெல்லி பயணம் தள்ளி போனது.. இப்போது தமிழ்நாட்டுக்கு தேவையானவைகளை எடுத்து சொல்லி, அதற்கான கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் தந்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. ஸ்டாலின் டெல்லி சென்றதில் இருந்து, பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு அளித்த வரவேற்பும், முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.



சென்னை ஸ்டாலின் சென்னை திரும்பி வந்துவிட்டாலும், டெல்லி பயணம் குறித்த இந்த பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.. அதற்குள் லண்டன் பயணம் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதற்கு முன்பும் ஸ்டாலின், தன்னுடைய சிகிச்சைக்காகவும், குடும்பத்துடன் ஓய்வெடுக்கவும் லண்டன் சென்றிருக்கிறார்.. ஆனால், இந்த முறை அரசியல் பயணமாக செல்ல உள்ளார்.

லண்டன் ஆம்.. லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. தற்போது பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு, அதற்கான தளர்வுகளும் ஒவ்வொருவரும் அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஸ்டாலின் லண்டன் பயணத்துக்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கு கிரீன் சிக்னலும் கிடைத்துள்ளதாக தெரிகிறது

பயணம் சமீபத்தில் தேர்தல் முடிந்தநிலையில், ரெஸ்ட்டுக்காக ஸ்டாலின் லண்டன் அல்லது அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது.. ஆனால், அப்போது தொற்று அதிகமாக இருந்ததாலும், வெளிநாடு சென்றுவிட்டால், பதவியேற்பு உள்ளிட்ட விஷயங்களில் உடனடியாக நாடு திரும்பி கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிடும் என்பதாலும்தான் அந்த பயணம் ரத்தானது..

அரசு பயணம் அதற்கு பதிலாகத்தான் கொடைக்கானல் குடும்பத்துடன் சென்று வந்தார். இப்போது மீண்டும் லண்டன் செல்வதாக வந்துள்ள தகவலால், தமிழ்நாட்டுக்கு தேவையான நலன்கள் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... முதல்வர் ஸ்டாலின் லண்டன் செல்வதற்கான பயண ஏற்பாடுகளும் தயாராகி கொண்டிருக்கிறதாம்..

கருத்துகள் இல்லை: