Bilal Aliyar : ஆர்எஸ்எஸ் அமைப்பின், அதன துணை அமைப்பின் விழாக்களில், அரசின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?
தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்குமானதே.
சேவாபாரதி போன்ற அமைப்புகள் உள் நோக்கம் கொண்டவையாக இருந்த போதிலும், மக்கள் சேவை என்ற ஒரு அடையாளத்தில் அமைச்சர்களை அணுகும் போது அவை மறுக்கப்படக்கூடாது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அங்கு சென்ற பிறகு நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. அது குறித்து பேசும்போது ஒரு வரலாற்று சம்பவத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்
கலைஞர் இந்துத்துவ பார்வைக்கும், இந்துத்துவ சக்திகளுக்கும் எதிராக செயல்படுகிறார், ஆகவே கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து பகவத்கீதையை நேரில் வழங்கி படிக்க சொல்ல போகிறேன் என அறிவிக்கிறார் இந்து முண்ணனி ராமகோபாலன். கலைஞரை சந்திக்க ராமகோபாலன் கோபாலபுரம் வருகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் காவல்துறையினரும், ஊடகத்தினரும் பரபரப்படைகின்றனர். காலம் முழுவதும் தான் எதிர்க்கும், சனாதன இந்துத்துவத்தை ஆதரிக்கும், திராவிடத்தை நேரடியாக எதிர்க்கும் ஒருவர் கலைஞரை சந்தித்தால் என்ன நேருமோ என்ற பதட்டமும் அனைவரையும் தொற்றிக்கொண்டது.
அந்த நேரமும் வந்தது, ராமகோபாலன் கோபாலபுரம் வீட்டிற்கு வந்தவுடன் கலைஞர் அவரை வரவேற்கிறார். ராமகோபாலன் தன் கையில் இருந்த பகவத்கீதையை கலைஞருக்கு அளிக்கிறார்.
கலைஞர் மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி கொண்டு, வந்தவரை திரும்பி அனுப்பக் கூடாதென, திக தலைவர் ஆசிரியர் ஐயா கி. வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை ராமகோபாலனுக்கு வழங்குகிறார். பகவத்கீதையை கலைஞருக்கு வழங்க வந்த இடத்தில் பகவத்கீதையை நேரடியாக விமர்சித்த கீதையின் மறுபக்கத்தை வாங்கி சென்றார் ராமகோபாலன்.
இம்மாதிரி தன் சித்தாந்தத்தை வலுவாமல் பின்பற்றிய தலைவனின் திராவிட இயக்க அமைச்சர்கள் சேவாபாரதியின் கூட்டத்தில் கலந்து கொண்டு, சமத்துவம், சமூகநீதி, மத்தல்லிணக்கம், சாதியத்தின் கூறுகளை குறித்து ஓரிரண்டு நிமிடங்கள் பேசியிருக்கலாம். ஏனெனில் திராவிட சித்தாந்த எதிர்ப்பு இடங்களில் அது குறித்து பேசும் வாய்ப்பு தானாக அமையும் போது அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். அம்மாதிரி எதுவுமே நடைபெறாததும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை போற்றும் நிகழ்ச்சியாகவே அது நடந்திருக்கிறது.…
ஏமாற்றமே மிஞ்சியது….. Sorry Honorable Mr. Vellakkivil Swamynathan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக